கோவை, அக்.17 வயது மூப்பினால் மூதாட்டி மரணம் அடைந்தார். உடலை சுமந்து சென்ற பெண்கள் அரசு மருத்துவ மனைக்கு உடற்கொடையளித்தனர். ஆனைமலையை அடுத்த காளியப்பன் கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 75). இவருடைய மனைவி காவேரியம்மாள்(82). இவர் களது குடும்பத்தினர் தந்தை பெரியார் மீது அதீத பற்று கொண்டவர்கள் ஆவர். இந்த நிலையில் காவேரியம்மாள் வயது மூப்பு காரணமாக 16.10.2022 அன்று மரணம் அடைந்தார். வழக்கமாக இறந்தவர்களின் உடலை ஆண்கள் சுமந்து சென்று அடக்கம் செய்வதுதான் வழக்கம். ஆனால் மரணம் அடைந்த காவேரியம்மாளின் உடலை பெண்கள் சுமந்து ஊரை சுற்றி வந்தனர். பின்னர் உடலை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடை யாக வழங்கினர். இறுதி நிகழ்வில் திராவிடர் கழக தோழர்கள் பங்கேற்றனர். காவேரி யம்மாளின் கணவர் சுப்பிர மணியன் கடந்த 2015ஆ-ம் ஆண்டு இறந்தார். அவரது உடலும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
Monday, October 17, 2022
மூதாட்டி உடலை சுமந்துசென்று உடற்கொடை அளித்த பெண்கள் : கழகத் தோழர்கள் பங்கேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment