சென்னை, அக்.19 சென்னை பல் கலைக்கழக வளாகத்தில் சமூகவியல் துறை சார்பில் நடைபெற்ற பொன் விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி கூறுகையில்: அறிவியல் வளர்ந்திருந்தாலும் சமூகத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு சமூகவியல் மிக மிக அவசியம். அந்த சமூகவியல் வழியில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக் கிறார், சமூகவியல் துறை சாதாரண மான படிப்பு அல்ல. எல்லா துறைக்கும் தாயாக விளங் குகிறது. பாரம்பரியமிக்க பாடமாகவும் உள்ளது. ஒரு மாநிலத்தில் சமூக வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கல்விக்கு என்று மிகப்பெரிய பிரச்சனை வந்தி ருக்கிறது. ஹிந்தி திணிப்பு என்பது அதிக அளவில் இருக்கிறது. விருப்பப்பட்டு படிப்பது வேறு கட்டாயப்படுத்தி படிக்க சொல்வது வேறு என்றார்.

No comments:
Post a Comment