'சுயமரியாதைச் சுடரொளி ' பேராசிரியர் ரெஜினா பாப்பா அவர்களின் மகன் மனோஜ் சிசில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்காக ரூ.25 ஆயிரம் நன்கொடை வழங்கினார். மனோஜ் தற்போது அமெரிக்காவில் உயர் பதவி வகிப்பவராவார். உடன்: பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் (13.10.2022 - சென்னை).
வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பா.ராமுவின் மகள் இரா.சினேகா, லண்டனில் மேற்படிப்பை முடித்து பணியில் சேர்ந்ததின் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, ஓராண்டு 'விடுதலை', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' சந்தா, 'பெரியார் உலகம்' நிதியாக ரூ.4070/- வழங்கினார். உடன்: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கோவி.கோபால், நந்தினி ராமு (17-10-2022- சென்னை).


No comments:
Post a Comment