செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

செய்திச் சுருக்கம்

உத்தரவு

‘நீட்' தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

குறுந்தகவல்

மின் கட்டணம் தொடர்பாக அலைப்பேசிகளில் வரும் எஸ்எம்எஸ்களை (குறுந்தகவல்கள்) யாரும் நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை!

பறிப்பு

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் 22ஆவது சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

நடவடிக்கை

குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டினால் சட்டப் படி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் தகவல்.

மாற்றம்

பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வந்த 27 உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்வதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.

No comments:

Post a Comment