87 ஆண்டுகளாக சுகாதாரம், நோய் தடுப்பு பயிற்சி அளிக்கும் நிறுவனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

87 ஆண்டுகளாக சுகாதாரம், நோய் தடுப்பு பயிற்சி அளிக்கும் நிறுவனம்

திருவள்ளூர், அக். 4- மருத்து வர்கள், செவிலியர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு 87 ஆண்டுகளாக சுகாதாரம், நோய் தடுப்பு தொடர் பான பயிற்சியை அளித்து வருகிறது பூவிருந்தவல்லி யில் உள்ள பொது சுகா தார நிறுவனம்.

தமிழ்நாடு பொதுசுகா தாரத் துறை மற்றும் நக ராட்சி நிர்வாகத் துறை யைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் ஆண்டு தோறும் இங்கு பயிற்சி பெறுகின்றனர். இந்த நிறுவனம் அக். 1 அன்று தனது 87ஆவது வயதை பூர்த்தி செய்தது. இது குறித்து நிறுவனத்தின் துணை இயக்குநர் மருத் துவர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் இந்நிறுவனம் செயல் பட்டு வருகிறது. திருவள் ளூர், பூந்தமல்லி, செய் யாறு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 6 சுகாதார மாவட் டங்களைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலி யர்கள் உள்ளிட்டவர்க ளுக்கும் மாநில அளவில் வட்டார மருத்துவ அலு வலர்கள், மாநகராட்சி, நகராட்சி மருத்துவ அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள் உள்ளிட் டோருக்கும் சுகாதாரம் மற்றும் அரசின் திட்டங் கள் தொடர்பான பயிற் சிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிறுவன வளாகம், 1935ஆம் ஆண்டு அமெ ரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையால், ‘சுகநலப்பகுதி’ என்ற பெயரால் தொடங்கப்பட் டது. சுகாதாரத்தை மேம் படுத்தும் பல்வேறு ஆராய்ச் சிகள் இங்கு நடந்தன. தொடர்ந்து, இந்திய அரசால் 1943இல் அமைக்கப்பட்ட போர் குழுவின் பரிந்துரைகள் பரிசோதனை முறையில் இங்கே செயல்படுத்தப் பட்டன. பின்னர் 1954 இல் போர்டு அறக்கட்ட ளையின் 3 பயிற்சி மய் யங்களில் ஒன்றாக இருந் தது. இந்நிறுவனத்தில் தான், 1956இல் குறைந்த செலவில் கழிப்பறைகளை கட்டிக் கொடுப்பதற்காக ஆராய்ச்சி மற்றும் செயல் திட்டம் தொடங்கியது. இதன்மூலம் எளிய வடிவ மைப்பு கொண்ட கழிப் பறைகள் பயன்பாட்டுக்கு வந்தன.

இந்நிலையில், 1961ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசின் கட்டுப் பாட்டில் இந்நிறுவனம் வந்தது. இங்கு இருந்த நலப்பிரிவு, புத்தறிவு பயிற்சி மய்யம், ஆராய்ச்சி மற்றும் செயல்திட்டம் ஆகியவற்றை ஒருங்கி ணைத்து பொது சுகாதார நிறுவனமாக தமிழ்நாடு அரசு கடந்த 1966இல் தொடங்கியது. அதுமட் டுமல்லாமல், கடந்த காலங்களில் தேசிய குடும்ப நலப் பயிற்சி மய்யம், தேசிய எய்ட்ஸ் கட்டுப் பாடு நிறுவனம் உள்ளிட் டவை சார்பில் தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட் சத்தீவுகளின் மருத்துவர் களுக்கு கருவில் பாலினம் அறிதல் மற்றும் கருக் கொலை தடுப்பு சட்டச் செயலாக்கம், எச்.அய்.வி- எய்ட்ஸ், தொழில் முறை மேம்பாட்டு கல்வி ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட் டன. இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று எட்டிப்பார்க்கத் தொடங் கிய காலத்தில், வெளிநாடு களில் இருந்து வந்த பய ணிகளை தனிமைப்படுத் தும் முதல் இடமாகவும் இருந்தது. இந்த பொது சுகாதார நிறுவனம்தான். சென்னை பெருவெள் ளம், வார்தா, தானே மற் றும் கஜா புயல் உள்ளிட்ட பேரிடர்களின் போதும் தன் சேவையை ஆரவார மின்றி செய்துள்ளது. 1.10.2022இல் 87 ஆண்டை  பூர்த்தி செய்து பொதுமக் களின் நல்வாழ்வுக்காக நூற்றாண்டை நோக்கி தனது சாதனை பயணம் மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment