பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க.வின் ‘ஆபரேஷன் தாமரை’ தோல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க.வின் ‘ஆபரேஷன் தாமரை’ தோல்வி

சண்டிகர்,அக்.4- பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக தனது சித்து விளையாட்டுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது.  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக ஜனநாய கத்துக்கு விரோதமாக ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை குறிவைத்து குதிரைபேரங்களை நடத்திவருவதும், அண்மையில் மராட்டிய மாநிலம் போன்ற சில மாநிலங்களில் பாஜக சூழ்ச்சி வெற்றி பெறுவதும், இன்னும் சில மாநிலங்களில் பாஜகவின் வித்தைகள் பலிக்காமல் தோல்வி அடைவதுமாக அரசியல் சூழல்கள் இருந்துவருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை தோல் வியைத் தழுவியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு ‘ஆபரேஷன் தாமரை’மூலம் நெருக்கடியை அளிக்கத் தொடங்கியது. ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் வளைத்திட குதிரைபேரங்கள் நடந்துவருவதாக பாஜகவுக்கு கடும் கண்டனத்தை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டார். பாஜகவின் ஆபரேஷன் தாமரை தோல்வியடைந்தது.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுமீதான நம்பிக்கை வாக்கெடுப் பில் அவ்வரசு வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப்பில்  ஆளும் ஆம் ஆத்மி கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களை வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாக  முதலமைச்சர் பகவந்த் சிங் மான் குற்றம்சாட்டினார்.  சட்டமன்ற உறுப்பினர்களை வளைக்க பாஜக கட்சி தலா ரூ.25 கோடி ரூபாய் வரை தருவதாக கூறியதாகவும் தெரிவித்தி ருந்தார். இந்த சூழ்நிலையில், சட்டப் பேரவையை கூட்டி நம்பிக்கை வாக் கெடுப்பை நடத்த முதலமைச்சர் மான் முடிவு செய்தார். அதன்படி கடந்த மாதம் 22ஆம் தேதி ஆம் ஆத்மி அரசு சட்டப் பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருந்தது. சட்டப் பேரவையை கூட்டுவதற்கு ஆளுநர் அனுமதி மறுத்து விட்டார். அதன்  பின்னர் சட்டப்பேரவையை கூட்ட கடந்த 27ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார். 

இந்நிலையில், பேரவையில் நேற்று (3.10.2022) நடந்த சட்ட மன்றக் கூட்டத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆம் ஆத்மியின் அரசுக்கு ஆதரவாக 91 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். சிரோன்மணி அகாலிதளத்தை சேர்ந்த ஒரு உறுப்பினர், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு உறுப் பினரும் சட்டமன் றத்தில் அமர்ந்திருந் தனர். அவர்கள் இந்த தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்று சட்டமன்றத்  தலைவர் குல்தார் சிங் சந்த் வான் தெரிவித்தார். காங்கிரசின் 18, பாஜ வின் 2, ஒரு சுயேச்சை உறுப்பினர் வெளி நடப்பு செய்தனர். இதன் மூலம், பஞ்சாப்பில் பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ சூழ்ச்சி தோல்வி அடைந் திருப்பதாக முதல மைச்சர் பகவந்த் மான் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment