கலங்கரை விளக்கம் - பூவிருந்தவல்லி வழித்தடத்தில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

கலங்கரை விளக்கம் - பூவிருந்தவல்லி வழித்தடத்தில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள்

சென்னை, அக். 4- சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூவிருந்தவல்லி வழித்தடத்தில் பாதைகள், சுரங்க ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறு கின்றன.

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தின் கீழ், ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. மாதவரம் - சிப்காட் சிறுசேரி வரை (3ஆவது வழித்தடம்) 45.8 கி.மீ. தூரத்துக்கும், கலங்கரை விளக்கம் - பூவிருந்தவல்லி பைபாஸ் வரை (4ஆவது வழித்தடம்) 26.1 கி.மீ. தூரத்துக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (5ஆவது வழித்தடம்) 47 கி.மீ. தூரத்துக்கும் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் - பூவிருந்தவல்லி பைபாஸ் வழித்தடத்தில் 16 கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையாகவும், 10.1 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையாகவும் அமைகிறது. உயர்மட்டத்தில் 18, சுரங்கப்பாதையில் 12 என மொத்தம் 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமை கின்றன. இந்த வழித்தடத்தில் முன்னுரிமை அடிப்படை யில் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2ஆம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை3ஆவது வழித்தடத்தில் சுரங்கம்தோண்டும் இயந்திரம் மூலமாக, சுரங்கப்பாதை அமைக்கும் பணிஇம்மாதம் தொடங்க உள்ளது. இத்தடத்தில் சுரங்க ரயில்நிலையங்கள் அமைக் கும் பணியும்தொடங்கப்பட்டுள்ளது. காந்தி சிலையில் இருந்து ராணிமேரி கல்லூரி வரை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், கச்சேரி சாலை, மயிலாப்பூர், அடையாறுகேட், நந்தனம், நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, கோடம்பாக்கத்தில் சுரங்கம் தோண்டி மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக் கும் பணி நடந்துவருகிறது. இப்பகுதிகளில் உள்ள குடி யிருப்புகளுக்கு பாதிப்புஏற்படாத வகையில், பலகட்ட சோதனைகளுக்கு பிறகு, பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 

-இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment