காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று : தமிழ்நாட்டில் வாக்காளர்கள் 710 பேர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று : தமிழ்நாட்டில் வாக்காளர்கள் 710 பேர்

புதுடில்லி,அக்.17- காங்கிரஸ் கட்சி யின் 137 ஆண்டுகால வரலாற்றில் 6ஆவது முறையாக கட்சித் தலைவர் பதவிக்கு இன்று (அக். 17) தேர்தல் நடைபெறுகிறது. 

இத்தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோரிடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. அந்தந்த மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதியுடைய நிர்வாகிகள் 9,000-க்கும் மேற்பட்டோர் வாக்களிக் கின்றனர். இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.

 வாக்குப்பதிவுக்குப் பின்னர் சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் டில்லி கொண்டு செல்லப்பட்டு, காங் கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்படும். தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும்.

 தமிழ்நாட்டில் 710 பேர் வாக்களிக்க ஏற்பாடு 

தமிழ்நாட்டில் மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் 710 பேர் வாக் களிக்கின்றனர். இதற்காக, டில்லியில் இருந்து 4 பிரத்யேக வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருட்கள் ஆகியவை வாக்குப்பதிவு நடைபெறும் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.

வாக்குச் சாவடிகளை அமைக்கும் பணிகளில் கட்சி நிர்வாகிகள் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர். அனைத்து வாக்காளர்களுக்கும் க்யூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை நேற்று (16.10.2022) வழங்கப்பட்டது. இதை பிரத்யேகக் கருவியில் காண்பித்த பின்னரே, வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியும்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா 5 வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். தேர்தல் அதி காரிகளாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த நெய்யாற்றங்கரை சனல், கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மாலையே சென் னைக்கு வந்து, தேர்தல் ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்


No comments:

Post a Comment