சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம்: தீட்சதர்கள் குடும்பத்தினர் 5 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம்: தீட்சதர்கள் குடும்பத்தினர் 5 பேர் கைது

சிதம்பரம், அக். 17- சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தைத் திருமணம் செய்து வரு வதாக கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அதிக மான புகார்  சென்றது.  இந்நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகள் அந்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் பகுதியில் முகாமிட்டு ரகசிய விசாரணை மேற்கொண்ட னர். குழந்தைத் திருமணம் நடந்து உள்ளது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து சமூக நலத்துறையினர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து மகளிர் காவல் துறையினர் கடந்த ஒரு மாதத்தில்  3  தீட்சிதர்கள் குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை நடராஜர் கோவில்தீட்சி தர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் வெங்கடேசன் தீட்சிதர், ராஜரத்தினம் தீட்சிதர் ஆகியோர் குழந்தைத் திருமணம் செய்ததால்  கடலூர் மாவட்ட டெல்டா காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.  இதில் ஹேம சபேசன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரையும் சிதம்பரம் கிளை சிறைச்சாலையில் அடைத் தனர். இவர்கள் இருவரும் குழந் தைத் திருமணம் செய்து வைக்கப் பட்ட சிறுவர் மற்றும் சிறுமியின் தந்தைகள் ஆவர்.  கைது செய்யப் பட்ட மாப்பிள்ளை ராஜரத்தினம் வழக்கில் சேர்க்கவில்லை. தீட்சி தர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அனைவரும்  தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.  அவர்களை காவல்துறையினர் அப்புற படுத்தும் முயற்சியில் ஈடு பட்ட போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தீட்சிதர்கள் காவல்துறையினரை ஒருமையில் பேசினர். இதனை யடுத்து தீட்சிதர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கிச் சென்று  வேனில் ஏற்றி கைது செய்து தனியார் மண்ட பத்தில் அடைத்தனர். தீட்சிதர் குடும் பத்தை சேர்ந்த பெண்கள் கீழ சன் னதியில் குடும்பத்துடன் அமர்ந்து இரவு 2 மணி  வரை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்தால் மட்டுமே  கலைந்து செல் வோம் என தெரிவித்தனர். 

ஆதாரத்துடன் புகார்

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சக்தி கணேசன் கூறுகையில் தீட்சிதர்கள் குழந் தைத் திருமணம் செய்துள்ளதாக ஆதாரத்துடன் 13 புகார்கள் வந் துள்ளதாகவும் அதில் 3 புகார்கள் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதேபோல் மாவட்ட த்தில் 22 புகார்கள் வந்துள்ளது அதனையும் இதே போன்று தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியை மறைத்து வைத்துக் கொண்டு விசாரணைக்கு ஒத்து ழைப்பு அளிக்க மறுக்கிறார்கள் - இது சட்டத் திற்கு புறம்பான செயல் . மீதியுள்ள புகார்களையும் விசாரணை மேற்கொண்டு சட் டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.


No comments:

Post a Comment