அரசுக் கல்லூரிகளில் 4000 பேர்களுக்கு நிரந்தரப் பணி! அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

அரசுக் கல்லூரிகளில் 4000 பேர்களுக்கு நிரந்தரப் பணி! அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு!

சென்னை, அக். 22- பல்வேறு கல்லூரி களில் பேராசிரியர்களை நியமிக்க, இந்தாண்டு தமிழ்நாடு முதலமைச்சர்  செய்திருக்கின்ற மிகப்பெரிய சாதனை யாக, இது வரை இல்லாத அளவிற்கு அரசுக் கல்லூரிகளில் 4000 பேர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அறிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் அவர் கூறியதாவது:

இன்றைய சூழ்நிலையில் பல் வேறு பொறியியல் கல்லூரிகளை நடத்து பவர்கள் எல்லாம், நம்முடைய உறுப்பினர் அவர்கள் கூறி யுள்ளதைப் போல, அரசு கலைக் கல்லூரியாக அதை மாற்றித் தர முடியுமா என்றும் கோரியிருக் கிறார்கள். ஆக, பொறியியல் கல் லூரிகளைவிட, இப்போது அரசு கலைக் கல்லூரிகளுக்கான தேவைகள் அதிகரித்துக் கொண்டிருக் கிறது என்பது நடைமுறைதான். இருந் தாலும், பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்திருக்கிற ‘நான் முதல்வன் ’ திட்டத்தின்படி, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான பாடத் திட்டங் களை மாற்றுவ தற்கான ஏற்பாடுகளும் பொறியியல் கல்லூரிகளில் செய்யப்பட் டி ருக்கின்றன . அவைகளும் செய்யப் படும். உறுப்பினர் அவர்கள், பொறியியல் கல்லூரியை அரசு கலைக் கல்லூரியாக கூடுதலாக வேண்டு மானால், கலை பாடப்பிரிவுகளைத் துவக்கலாமே தவிர, கல்லூரிகளை அப்புறம் அவரே வந்து நாளைக்குச் சொல்வார் ‘பொறியியல் கல்லூரி களை மூடிவிட்டீர்கள்’ என்று சொல் வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆகவே , இங்கே உயர் கல்வியைப் பொறுத்தவரையில் பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இருந் தாலும், அனைத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப செயல் படுத் துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். 

 நிதிநிலைமைக்கேற்ப பல்வேறு கல்லூரிகளிலே பேராசிரியர்களை நிய மிப்பதற்கான இந்தாண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செய்திருக்கின்ற மிகப் பெரிய சாதனையாக இதுவரை இல்லாத அளவிற்கு 4,000 பேர்களுக்கு நிரந்தரப் பணியை அரசுக் கல்லூரிக ளிலே கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிற ஒரே முதல மைச்சர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்தான். (மேசையைத் தட்டும் ஒலி) இதுவரை இவ்வாறு 4,000 பேர் நியமனம் செய்யப்பட்டது கிடையாது. அதிலே additional ஆகவும் போடுவதற்கு உத்தர விட்டிருக்கிறார்கள். நீங்கள் கேட்டிருக்கிற additional course s -அய்ப் பொறுத்தவரை, அந்தக் கல்லூரியின் முதல்வரிடம் சொல்லி, கருத்துருவினை அனுப்பினால், அதற்கான ஏற்பாடு களை செய் தற்கு ஆவன செய்யப்படும் என்ப தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். 


No comments:

Post a Comment