ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 2 பேரை காணவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 2 பேரை காணவில்லை

நாகர்கோவில், அக். 24- குமரி மாவட்டம் நாகர்கோவில், கடிய பட்டணம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சகாய செல்சோ (வயது 37). இதே பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி வின்சென்ட் (33). இவர்கள் 2 பேரும் பக்ரைன் நாட்டில் அங்குள்ள முதலாளி தராக் மாஜித் என்பவரால் அவரது படகில் மீன்பிடிப்பதற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டனர். 

இந்த 2 மீனவர்களும் கடந்த 17ஆம் தேதி அங்கு மொராக் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கு ஆழ்கடலுக்கு சென்றனர். 3 நாட்களில் இந்த மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்ப வேண்டும். அதன்படி 19ஆம் தேதியே இவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் 8 நாட்களாகியும் இந்த மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதையறிந்த தெற்காசிய மீனவ தோழமை, வளைகுடா நாட்டில் உள்ள இந்திய மீனவர்கள் அனை வரையும் தொடர்பு கொண்டு விசாரித்தது. அப்போது அவர்கள் மீன்பிடிக்கும் அந்த நாட்டுக்கடல் பகுதியில் மீனவர்கள் உள்ளார் களா? என்று தேடிப் பார்த்தும் அவர்களை பற்றிய தகவல் இல்லை.

இதனால் மீனவர்கள் நிலைமை என்ன? என்பது மிகவும் அச்சத்திற் குரியதாக இருக்கிறது. காணாமல் போன மீனவர்கள் ஒரு வாரம் ஆகியும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது மீனவர் களின் குடும்பத் தினரை அதிர்ச்சியடைய செய்துள் ளதோடு, அவர்கள் உயிருக்கு ஏதா வது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ? என்ற ஒரு அச்சமும் ஏற்பட்டு உள்ளது. 

எனவே காணாமல் போன 2 மீனவர்களையும் உடனடியாக கண்டுபிடித்து தரக்கோரி பக்ரைன் அரசை வலியுறுத்த வேண்டுமென தெற்காசிய மீனவ தோழமையின் பொதுச்செயலாளர் சர்ச்சில், மீனவ குடும்பங்களின் சார்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

No comments:

Post a Comment