தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கூட்டம்

தஞ்சை, செப். 30- தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் உலகத் தலை வர் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தெருமுனைக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட திராவிட மாண வர் கழகம் சார்பில் உலகத் தலைவர் தந்தை பெரியார் 144 ஆம் பிறந்த நாள் விழா கூட்டம் 18.09.2022 மாலை 6.00 மணிக்கு தஞ்சை புதிய பேருந்து நிலை யம் அருகில் உள்ள ஆர்.ஆர்.நகரில் மாநில கலைத்துறை செயலாளர் ச. சித் தார்த்தன், மாவட்ட பகுத்தறிவாளர்  கழக செயலாளர் பாவலர். பொன்னரசு, இசைக் கலைஞர் ரெட்டிபாளையம் முத்துக்களி ஆகியோரின் இசை நிகழ்ச் சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து தஞ்சை மாவட்ட மாணவர் கழகத் துணைத் தலைவர் ச.சிந்தனை அரசு அனைவரையும் வர வேற்றார். மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக துணை அமைப்பாளர் திருவையாறு ம. ஓவியா, மாவட்ட மாணவர் கழக தலைவர் இரா. கபிலன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் இர. மகேந்திரன், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் ஜா.இரா. நிலவன், தஞ்சை வடக்கு மாணவர் கழக செயலாளர்  கொ.சி.அன்புமணி ஆகி யோர் முன்னிலையில் தஞ்சை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்  தொடக்க உரையாற்றினார். கழக பொதுச்செயலாளர்  இரா. ஜெயக் குமார், கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப் பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர அமைப்பாளர் செ. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி உரை

மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி உலகத் தலைவர் தந்தை பெரியாரின் கொள்கைகளை அவர் வாழ்ந்த கால கட்டத்தில் பார்ப்பன கூட்டம் கல்வியில் வேலைவாய்ப்பில் சுரண்டிய நிலையை தந்தை பெரியார் போராட் டங்களால் முறியடித்த நிகழ்வை மற்றும் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காலகட்டத்தில் நடைபெறுகிற கல்வியில் வேலை வாய்ப்பில் பார்ப்பன கூட்டம் தொடர்ச்சியாக சங் பரிவார் கூட்டம் ஊடுருவி இருக்கும் சூழலில் அதை முறியடிக்கும் பல போராட்டங்களையும் ஆசிரியர் அவர்கள் நாள்தோறும் விடுதலையில் எழுதுகிற அறிக்கைகள் மூலமாக நமக்கு கிடைத்த கல்வி உரிமை வேலை வாய்ப்பு உரிமை சமூக உரிமை பற்றி மிக எழுச்சியுடன் குறிப்பாக நீட் தேர்வில் நமது கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் சூழலையும் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் தொடர்ச்சியாக 90 வயதிலும் தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு பெரும் பயணத்தை மேற்கொண்டதையும் விலாவாரியாக ஏராளமான மக்களிடம் இளைஞர்களி டம் மாணவர்களிடம் உரையாற்றினார்.

கூட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளை மற்றும் தெருமுனை கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு 

அ. இராமலிங்கம், தஞ்சை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பா. விஜய குமார், மாவட்ட தொழிலாளரணி  தலைவர் சா. சந்துரு, மாவட்ட மாண வர் தலைவர் இரா. கபிலன், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் ஜா.இரா.நிலவன் ஆகி யோருக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் பயனாடை அணிவித்து சிறப்பித்தார். பள்ளி மாணவர் கழக அமைப்பாளர் இரா. கவிநிலா மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி பயனடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கூட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு. பழனி வேல், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா. வெற்றிக்குமார், மண்டல மகளிரணி செயலாளர் 

அ.கலைச்செல்வி, மண்டல இளைஞரணி செயலாளர் வே. இராஜவேல், மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, தஞ்சை மாநகரத் தலைவர் பா. நரேந் திரன், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலா ளர் க.அரங்க ராஜன், மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் குழந்தை.கவுதமன், மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் இரா. சரவணக்குமார், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் நா. சங்கர், ஒன்றிய இளைஞரணி தலைவர் ஆ. பிர காஷ், மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வம், உரத்தநாடு ஒன்றிய தலைவர் த. ஜெக நாதன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் கு. குட்டிமணி, மாநகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சாமி. கலைச் செல்வன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச. கண் ணன், தலைமைக் கழக பேச்சாளர்  பூவை.புலிகேசி, உரத்தநாடு மேற்கு பகுதி செயலாளர் புலவர். மோகன்தாஸ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெ. பெரியார் கண்ணன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் களிமேடு ர.அன் பழகன், ஒக்கநாடு மேலையூர் பொறி யாளர். பாலகிருஷ்ணன், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி செயலாளர் காரல் மார்க்ஸ், புதுக்கோட்டை மாவட்ட மாணவர் கழக தலைவர் யோகராஜ், தஞ்சை விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர் குணசேகரன், திருவையாறு ஒன்றிய பொறுப்பாளர் மதுரகவி, ஒக்கநாடு மேலையூர் பெரியார் மணி, தஞ்சை மாநகர மேனாள்  செயலாளர் ரவிக்குமார்,  திருவையாறு ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் ராகுல், கரந்தைப் பகுதி செயலாளர் தனபால், தஞ்சை மாணவர் கழக தோழர்கள் பொ.பகுத்தறிவு, ப. யாழினி,  தஞ்சை பகுத்தறிவாளர்கள் கழக தோழர்கள் செந்தில்குமார், வெற்றி மாறன், தெற்குநத்தம் எழிலரசன், மணிமொழி குணசேகரன், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மேனாள் மாணவர் யோவான்,பெரியார் பிஞ்சுகள் கு.இசைப்பிரியா, கு.மகிழ்நன் மற்றும் கழகத் தோழர்கள் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அனை வருக்கும் தஞ்சை மாவட்ட மாணவர் கழக துணைச் செயலாளர் ஏ. விடுதலை அரசி நன்றி கூறினார். கூட்டத்திற்கு மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் தலைமை யேற்று கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

புலவன்காடு

17-.9.-2022 சனிக்கிழமை அன்று காலை 08:00மணிக்கு புலவன் காடு கிளை கழகத்தின் தோழர்கள் கர்னல் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் மேனாள் துணைவேந்தர் நினைவு தந்தை பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி படிப்பகம் தலைவர் வே.அன்புமணி, செயலாளர் மாநல் பரமசிவம், பொருளாளர் வி.எம்.கிருஷ்ணன், பெரியாரிய சிந்தனையா ளர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் சிறப்பாக பெரியார் சிலை மற்றும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம் உரத்தநாடு ஒன்றி யத்தில் நடைபெற்றது.


No comments:

Post a Comment