பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் பள்ளி மாணவர்களுக்கு சோற்றுடன் உப்பு மட்டுமே வழங்கிய அயோத்தியா அரசுப்பள்ளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் பள்ளி மாணவர்களுக்கு சோற்றுடன் உப்பு மட்டுமே வழங்கிய அயோத்தியா அரசுப்பள்ளி

படமெடுத்த ஊடகவியலாளர் கைது - தலைமையாசிரியர் இடமாற்றம்

அயோத்தி, செப்.29  உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு கொடுக்கும் மதிய உணவில் வெறும் சோறு மற்றும் உப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் படமெடுத்து வெளியிட பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் பள்ளி  இடையூறு செய் ததாகக் கூறி ஊடகவிய லாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம் அயோத் தியில் ரூ.1,800 கோடியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரு கிறது, சாமியார் அரசு ஒவ் வொரு தீபாவளியிலும் ரூ.130 கோடிக்கு மேல் செலவு செய்து லட்சக்கணக்கான விளக்கு களை சராயு நதிக்கரையில்  ஏற்றுகிறது, 

 மேலும் ராமர் சிலை ஒன்றை ரூ.240 கோடியில் சராயு நதியின் குறுக்கே வைக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளைத் துவங்கி உள்ளது. அயோத்தி முழுவதும் ராமர்கோவில் கட்டிய பிறகு மக்கள் வந்து செல்ல சுமார் ரூ.800 கோடியில் நகரம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 

 இந்த நிலையில் அங்குள்ள பல அரசு பள்ளிகளில் மதிய உணவு என்ற பெயரில் சோறும் உப்பும் மட்டுமே கொடுக்கப் படுகிறது. அயோத்தியாவின் திகாபூர் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் நீண்ட நாட்க ளாகவே சோறும் உப்பும் மட்டுமே மதிய உணவாக வழங்கப்படுகிறது என்று புகார் வந்ததை அடுத்து உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் நேரடியாக படமெடுக்க அங்கு சென்றார். அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த குழந்தைகளிடம் பேசிய போது ஒரு கரண்டி சோறும் கொஞ்சம் உப்பும் மட்டுமே தரு வார்கள். அதை சாப்பிட வேண்டும், வெளியில் கொட் டினால் அடிப்பார்கள் என்று கூறினர். மேலும் உப்பும் சோறும் சாப்பிட்டுக் கொண்டு இருந்த குழந்தைகளை பட மெடுத்தார். 

 அங்குள்ள ஆசிரியர்களிடம் பேசிய போது, எங்களுக்கு இதுதான் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். எங்களிடம் வேறு சாமான்கள் இல்லை. பை நிறைய உப்பு இருக்கிறது -_ மூட்டை அரிசி வந்துவிடும் -_ அதை வைத்து நாங்கள் இப்படித்தான் கொடுக்க முடியும் என்று கூறினர். 

 இந்த நிலையில் தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது, “பள்ளி நேரத்தில் வந்து பட மெடுத்து எங்களது வேலையை கெடுக்கிறீர்கள். ஆகவே அரசுப்பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் அளிப்பேன் வெளியே போ” என்று கூறினார்.  இந்த நிலையில் ஊடகவியலாளர் எடுத்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது, இதனைத் தொடர்ந்து அப் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். படமெடுத்த ஊடகவியலா ளரை அரசுப் பணியாளர்களை மிரட்டிய புகாரின் பேரில் காவல்துறை கைதுசெய்தது.  

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் சுடுதண்ணீர் மற்றும் ரொட்டி சாப்பிட வழங்கியது தொடர்பாக ஒரு ஊடகவியலாளர் படமெடுத்து வெளியிட்டார். அவரும் இதே போல் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment