மூட நம்பிக்கை முற்றி விட்டதோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

மூட நம்பிக்கை முற்றி விட்டதோ!

தோஷத்தைக் கழிக்க ஓர் இரவு சிறையில் தங்குவதற்கு உத்தரகாண்ட்டில் ரூ.500 கட்டணம்  

டேராடூன்,செப்.29-உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சிறையில் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் தங்களுக்கு சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷம் போய்விடும் எனும் மூடநம்பிக்கை நிலவுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓர் இரவுக்கு ரூ.500 கொடுத்து விட்டு சிறையில் இருந்துவிட்டு வரலாம் என்ற திட்டம் இருக்கிறது. அதை போலவே தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் திட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது. ஜாதகத்தில் நேரம் சரி இல்லை என்று நம்புபவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி சிறைக்குள் செல்கின்றனர். சிறையில் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் அந்த தோஷம் தங்களை மீண்டும் தீண்டாது எனும் மூடநம்பிக்கை நிலவுகிறது.

ஹால்த்வானி பகுதியில் சிறை உள்ளது. இந்த சிறையில் தற்போது கைதிகளை அடைப்பதில்லை. 1903-ல் கட்டப்பட்ட இந்த சிறை வளாகத்தில் சிறைக்கூடம், ஆயுதக் கிடங்கு, ஊழியர்கள் குடியிருப்பு ஆகியவை அமைந்துள்ளன. இதுகுறித்து ஹால்த்வானி சிறை துணை கண்காணிப்பாளர் சதீஷ் சுகிஜா கூறும்போது, ‘‘தோஷம் என்று கூறி வருபவர்களுக்கு கைதி உடைகள், உணவுகளை வழங்குகிறோம்’’ என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment