சென்னை, செப்.17 சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஒன்றிய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் கலைஞரின் இலக்கியப் பணிகளை போற்றும் வகை யில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக் கப்பட உள்ளது.
இந்த திட்டம் செயல் படுத்தப்பட உள்ள இடத் தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற் கொண்டு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் துறை அமைச்சகத் துக்கு, தமிழ் நாடு அரசின் பொதுப்பணித் துறை கடிதம் எழுதி இருந்தது.
இந்த நிலை யில், சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஒன்றிய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது.
No comments:
Post a Comment