ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு 77 சதவீதமாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு 77 சதவீதமாக உயர்வு

ராஞ்சி, செப்.17 ஜார்க்கண்ட் மாநில அரசு வேலை வாய்ப் புகளில் தாழ்த்தப் பட்டோர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோ ருக் கான இட ஒதுக்கீடு 77 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. 

ஜார்கண்ட் மாநில முதல மைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், மாநில அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்துவ தற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப் பட் டது. தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீத மாகவும்,  பழங்குடியினருக்கான இட ஒதுக் கீடு 26 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கு 14 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும், இதர பிற் படுத்தப்பட்டோ ருக்கு 12 சதவீதம், பொருளா தாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம் என மொத்தம் 77 சதவீத இட ஒதுக்கீடு வழங் கப்பட உள் ளது.

 இதை அரசியல் சட்டத் தின் 9-ஆவது அட்ட வணையில் சேர்க்கு மாறு ஒன்றிய அரசை வற்புறுத் துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

முன்னதாக கடந்த மாதம், தாழ்த்தப் பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைகளை பரிந்துரைப்பதற்கான குழுவை அமைக்க அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஒப்புதல் அளித் திருந்தது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment