மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி 6 லட்சம் பேர் பெரியாரை வாசித்து வரலாற்று சாதனை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி 6 லட்சம் பேர் பெரியாரை வாசித்து வரலாற்று சாதனை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

சேலம், செப்.17 மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சியில் 6 லட்சம் பேர் பெரியாரை வாசித்து வரலாற்று சாதனை படைத்துள் ளதாக பெரியார் பல் கலைக் கழக துணை வேந்தர் ஜெகநாதன் தெரிவித்தார். 

 பெரியாரை வாசிப்போம் 

சேலம் அருகே உள்ள கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகத்தில், 'பெரியாரை வாசிப் போம்' என்ற மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலு வலர் மேனகா முன் னிலை வகித்தார். 

பல் கலைக் கழக துணை வேந்தர் ஜெக நாதன் தலைமை தாங்கி, பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:-

 சேலம் மாவட்டத்தில் உள்ள 609 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 4,01,378 மாணவ -_ மாணவிகள், 18,285 ஆசிரியர்கள் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம், இதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் படிக்கும் 1,77,313 மாணவ- _ மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த வாசிப்பானது மாணவர்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்த உதவுகிறது. 

6 லட்சம் பேர் 

இன்றைய இளைய சமுதாயத் தினரிடையே புத்தகம் வாசிப்பது குறைந்துள்ள நிலையில், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை மேம் படுத்தவும், பெரியாரின் கொள்கை களை மாணவர் மனதில் விதைக் கவும் இந்த நிகழ்வு ஓர் உந்து சக்தியாக இருக்கும். இதில் ஒரே நேரத்தில் 6 லட்சம் பேர் பெரியார் குறித்த உரையை வாசித்து மிக பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் முருகன், பதிவாளர் (பொறுப்பு) கதிரவன், கலைஞர் ஆய்வு மய்ய இயக்குநர் (பொறுப்பு) சுப்பிரமணி, நூலகர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள், மாணவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment