பிள்ளையார் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து கூறவில்லையே என்று இரண்டு சூத்திர பிஜேபி சங்கிகள் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.
புராணக் கதைகளை தந்தை பெரியார் புராண புளுகுகள் என்றுதான் கூறுவார். அவர் மேலும் கூறுகிறார் - பிள்ளையார் பிறப்பிற்கு நான்கு கதைகள் கூறப்படுகின்றன.
முதலாவதாக பார்வதி குளிக்க செல்லும் முன் தன் உடல் அழுக்குகளை திரட்டி ஒரு பொம்மை செய்து வாசலில் காவல் வைத்ததாகவும், அப்போது அங்கு வந்த சிவனை அந்த அழுக்கு பிள்ளை உள்ளேவிட மறுத்ததாகவும், சிவன் கோபம் கொண்டு அதன் தலையை வெட்டி விட்டு உள்ளே வந்ததாகவும் இதைக் கண்டு பார்வதி அழ, சிவன் அங்கு அருகில் இருந்த ஒரு யானை தலையை வெட்டி அந்த அழுக்கு பிள்ளை உடலோடு சேர்த்து உயிர் கொடுத்ததாகவும்,
இரண்டாவதாக, ஆண், பெண் யானைகள் புணர்ந்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த சிவனும், பார்வதியும் ஆண், பெண் யானைகளாக மாறி புணர்ந்து பெற்றதுதான் பிள்ளையார் என்றும்,
மூன்றாவதாக தக்கன் என்பவன் செய்யும் யாகத்தைத் தடை செய்ய சிவன்தன் பிள்ளையை அனுப்பியதாகவும் தக்கன் அந்த பிள்ளையின் தலையை வெட்டி எறிந்ததாகவும் சிவன் ஒரு யானையின் தலையை வெட்டி அந்த பிள்ளையின் உடலோடு சேர்த்து உயிர் கொடுத்ததாகவும்,
நான்காவது ஒரு அசுரன், பார்வதி கருவற்றிருக்கும் போது காற்றாக மாறி பார்வதி கர்ப்பப்பையில் நுழைந்து அங்கு வளர்ந்து வரும் சிசுவின் தலையை வெட்டி விட்டதாகவும், பிறகு அந்த சிசுவின் உடலோடு ஒரு யானையின் தலையை வெட்டி ஒட்டி உயிர் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
இவற்றில் ஏதாவது அறிவுக்குப் பொருத்தமாயிருக்கிறதா? இந்த ஆபாச பிள்ளையாருக்கு விழா எடுக்க வேண்டுமா?
இக்கதைகள் எல்லாம் சூத்திரர்களை நம்ப வைத்து அவர்களை என்றென்றும் சூத்திரர் களாகவே இருக்க வைக்கும் சூழ்ச்சிதானே இது.
பார்ப்பனர்கள் - தங்கள் முன்னோர்கள் இந்த சூத்திரர்களை வைப்பாட்டி மக்கள் என்று கூறியது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறதுஎன்று கூறி தங்களுக்குள் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
விஞ்ஞான அறிவை வளர்க்க வேண்டுமென்ற அரசமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்து ஆட்சிக்கு வந்த பகுத்தறிவாளர்கள் இந்த ஆபாச கடவுளர்களின் விழாக்களுக்கு எல்லாம் வாழ்த்துக் கூற மாட்டார்கள்.
- பெரியார் திறலோன், புதுச்சேரி
No comments:
Post a Comment