மும்பை கலவரத்தின் போது ஓடி ஒளிந்தவர்கள்; பா.ஜ.க. குறித்து சிவசேனா விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

மும்பை கலவரத்தின் போது ஓடி ஒளிந்தவர்கள்; பா.ஜ.க. குறித்து சிவசேனா விமர்சனம்

மும்பை, செப்.14 மும்பை கலவ ரத்தின் போது ஓடி ஒளிந்த வர்கள், இன்று யாகூப் மேமன் கல்லறை பிரச்சினையை எழுப்பு வதாக பா.ஜனதா குறித்து சிவசேனா விமர்சித்து உள்ளது.  

மும்பையில் உள்ள குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி யாகூப் மேமன் கல்லறை அலங் கரிக்கப்பட்ட நிகழ்வு சர்ச் சையை ஏற்படுத்தி இருந்தது. யாகூப் மேமன் கல்லறை உத்தவ் தாக்கரே ஆட்சியில் இருந்த போது தான் கட்டப்பட்டதாக வும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா கூறியது 

இந்தநிலையில் இந்த விவ காரம் தொடர்பாக சிவசேனா கட்சி சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:- 

யாகூப் மேமன் கல்லறைக்கும் சிவசேனாவுக்கு எந்த தொடர் பும் கிடையாது. தேவையின்றி இந்த சர்ச்சையில் சிவசேனாவை இழுத்துவிட்டு உள்ளனர். மும்பை கலவரம் மற்றும் குண்டு வெடிப்பு நிகழ்வுகளை சிவ சேனா தான் எதிர்கொண்டது. அந்த நேரத்தில் இன்று இந்துதுவாவாதிகள் என தங்களை கூறி கொள்பவர்கள் (பா.ஜனதா)பொந்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். இன்று யாகூப் மேமனை வைத்து அரசியல் செய்பவர்கள், அந்த போராட்டத்தில் பங்கு பெறவில்லை. யாகூப் மேமன் தூக்கில் போடப்பட்டவுடன் அப்போது முதலமைச்சராக இருந்த பட்னாவிஸ் அவரது உடலை ஏன் நாக்பூர் ஜெயிலில் அடக்கம் செய்யவில்லை. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல்குரு உடலை போல, யாகூப் மேமன் உடலும் அகற்றப்பட்டு இருந் தால் இந்த பிரச்சினையே வந்து இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment