உலகில் 2.2 கோடிக்கு மேற்பட்டோர் கட்டாயத் திருமண உறவில் உள்ளனர்: அய்.நா. தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

உலகில் 2.2 கோடிக்கு மேற்பட்டோர் கட்டாயத் திருமண உறவில் உள்ளனர்: அய்.நா. தகவல்

நியூயார்க்,செப்.14- உலகில் 2.2 கோடிக்கும் மேற் பட்டோர் கட்டாயத் திரு மண உறவில் இருக்கி றார்கள் என்று அய்க்கிய நாடுகள் அமைப்பின் ஆய் வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டிற்குள் அனைத்து வகையிலான நவீன அடிமைத்தனத்தை யும் ஒழிக்க அய்க்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், 2016 முதல் 2021 வரை கட்டாய வேலை (கொத்தடிமை முறை) மற் றும் கட்டாயத் திரும ணத்தில் சிக்கியவர்களின் (விருப்பம் இல்லாதவர் களுடன் திருமணம் செய்து கொள்வது, விருப்பம் இல் லாமல் திருமண உறவில் நீடிப்பது) எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அய்க்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அய்க்கிய நாடுகளின் வெளியிட் டுள்ள அறிக்கையில், “வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷனுடன் இணைந்து அய்க்கிய நாடு களின் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஆய்வில், 2021-ஆம் ஆண்டு இறுதி வரை 2.8 கோடி பேர் கட்டாயத் தொழிலாளர்களாக ஈடு படுத்தப்பட்டிருக் கிறார்கள். 2.2 கோடி பேர் கட்டாயத் திருமண உற வில் இருந்து கொண்டிருக் கிறார்கள் என கண் டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் உலக மக்கள் தொகையில் 150 பேரில் ஒருவர் நவீன அடிமைத் தனத்தில் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. தொழிலாளர்களின் நிலையை கரோனா காலம் மோசமாக்கியுள்ளது. 5-இல் ஒரு குழந்தை, குழந்தைத் தொழிலாளராக கட்டா யப்படுத் தப்படுகிறது.

நவீன அடிமைத்தனம் என்பது உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது. கட்டாயத் தொழி லாளர், கட்டாயத் திரும ணங்கள் உயர் - நடுத்தர வருமானம் உடைய நாடுகளிலும் இருக்கின்றன. மேலும், பெண்கள் கட்டாயத் திருமணத்தில் இருப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பன் னாட்டு தொழிலாளர் அமைப்பின் தலைவர் கை ரைடர் கூறும்போடு, “அடி மைத்தனத்தின் நிலைமை மேம்பட வில்லை என்பது அதிர்ச் சியளிக்கிறது. இம்மாதிரி யான மனித உரிமை மீறலை நியாயப்படுத்த முடியாது” என்றார்.

No comments:

Post a Comment