மோசடி வழக்கில் சிக்கினார் டிரம்ப் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

மோசடி வழக்கில் சிக்கினார் டிரம்ப்

நியூயார்க் செப்.24 அமெரிக் காவின் மேனாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவ ரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட் டுள்ளது.

அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் என்பவர், மேனாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மூன்று வாரிசுகளுக்கு எதிராக 250 மில்லியன் டாலர்கள் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தார். டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மோசடி செய்ததற்காக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அவர்கள் மீது இந்த வழக்கினைத் தொடர்ந் தார். 

இந்த மோசடி வழக்கு தொடர்பாக சுமர் 200 பக்க ஆவ ணத்தில், டிரம்ப்பிற்கு சொந்த மான அனைத்து வணிகத்தின் மீதும் வழக்கு தொடரப்பட்டுள் ளது. டிரம்பின் சொத்துக்களை பொய்யாக உயர்த்தும் முயற்சி களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளதாவது:- 

டிரம்ப், தனது குழந்தைகள்  மற்றும் டிரம்ப் அமைப்பில் உள்ள நிர்வாகிகளின் உதவியுடன், தொடர்ந்து கடன் ஒப்பந்தங்களை திருப்திப்படுத்த தனது சொத்து நிகர மதிப்பை பொய்யாக உயர்த்தினார்.

2011 மற்றும் 2021 க்கு இடையில், டிரம்ப் மற்றும் டிரம்ப்பின் அமைப்பு   கடன் வழங்குபவர்களை தவறாக வழிநடத்தி அதிக சாதகமான கடன்களைப் பெற முயற்சித்தனர்.    டிரம்ப் அமைப்பின் கார்ப்பரேட் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டுள்ளது என்று கூறினார்.  இந்த வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது. ஏற்கெனவே டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment