தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை - கல்வியின் தரத்தை வெகுவாக உயர்த்தும் - குழுத் தலைவர் நீதிபதி டி. முருகேசன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை - கல்வியின் தரத்தை வெகுவாக உயர்த்தும் - குழுத் தலைவர் நீதிபதி டி. முருகேசன்

சம்பந்தப்பட்டவர்களின் குறிப்பாக மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களின் ஆலோசனை களையும் கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகு நிபுணர்களால் உருவாக்கப்படும் தமிழ் நாடு மாநில அரசின் கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் கல்வியின் தரத்தை வெகுவாக மேம்படுத்தும் என்று நிபுணர் குழுவின் தலைவர் நீதியரசர் டி.முருகேசன் கூறினார்.

இந்த 12 உறுப்பினர் குழுவின் முதல் மண்டலக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியபின் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், கல்வி கற்பிப்பது கற்பது மற்றும் தேர்வு நடைமுறையில் விரும்பத் தகுந்த மாற்றத்தை தமிழ்நாட்டு அரசின் கல்விக் கொள்கை ஏற்படுத்தும் என்று  கூறினார். அடுத்த பத் தாண்டு காலத்தில் கல்வித் துறையில் புதிய ஒளியைப் பாய்ச்சி அது வழிகாட்டும் என்றும் அவர் கூறினார்.

அண்மைக் கால அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் கல்வி கற்பிக்கும் நடைமுறைகளை நவீன மயமாக்க வேண்டிய தேவைகளின் அடிப்படையில் கல்வித் திட்டத்தை  மாற்றியமைப்பது முதற்கொண்டு  சம்பந்தப்பட்டவர்கள தெரிவிக்கும் ஆக்க பூர்வமான பயன் நிறைந்த ஒவ்வொரு அம்சத்தையும் இந்தக் குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்று அவர் கூறினார். உடல் குறைபாடு உள்ளவர்கள்; மனநலம் குன்றியவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கான  தரமான  கல்வித் திட்டம் அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

மேலும் 7 மய்யங்களில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கருத்துக் கேட்புக் கூட்டங் களில் கூடுதலான மாணவர்கள் பங்கெடுத்துக் கொள் வதற்கு இந்தக் குழு ஊக்கம் அளிக்கும் என்றும் அடுத்த கூட்டம் மதுரையில் நடைபெறும் என்றும்  கூறினார்.

No comments:

Post a Comment