முதலமைச்சர்மீது அவதூறு சுவரொட்டி அண்ணாமலை உதவியாளர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

முதலமைச்சர்மீது அவதூறு சுவரொட்டி அண்ணாமலை உதவியாளர் கைது

சென்னை, செப்.24 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப் பிய பாஜக தலைவர் அண்ணா மலையின் உதவியாளர் கிருஷ்ண குமார் முருகன் கைது செய்யப் பட்டுள்ளார். அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் தேடப் பட்டுவரும் கொலைகுற்றவாளிகள் பாஜகவின் முக்கிய பதவியில் உள்ளது தெரியவந்துள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த சுவரொட்டிகள் ஊடகம் ஒன்றின் அட்டைப்படம் போல வடிவமைக்கப்பட்டு, முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து வெளியாகாத ஒரு செய்தியை வெளியானது போல வடிவமைப்பு செய்து பல இடங்களில் ஒட்டி இருந்தனர்.

இந்த சுவரொட்டிகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில்  புகார் கொடுக்கப்பட் டது. சென்னையில் தற்போது சிங் கார சென்னை திட்டம் செயலில் உள்ளது. இதன் காரணமாக மாநக ராட்சி இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதால் சென்னை மாநகராட்சி மண்டலம் அய்ந்தின் உதவி பொறி யாளர் ராஜ்குமார் என்பவரும் இது தொடர்பாக  புகார் அளித்தார். உடனே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். எஸ்பிளனேடு காவல்நிலையம் சார் பாக இந்த வழக்கு பதியப்பட்டது.

விசாரணையில் அங்கு சுவ ரொட்டியை ஒட்டியது பிலிப்ராஜ் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் வண்ணைப் பகுதியைச் சேர்ந்தவர். அதோடு அவருக்கு எதிராக கொலை வழக்கும் முன்பே இருந்துள்ளது. 2000ஆம் ஆண்டு கொலை செய் யப்பட்ட நபர் ஒருவரின் வழக்கில் முக்கிய குற்றவாளி இவர்தான். அவரை  கைது செய்த போது அவரின் வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் அந்த சுவரொட்டிகள் பல இருந்துள்ளன.

யார் இந்த சுவரொட்டியை ஒட்ட சொன்னது என்று அவரிடம் விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் "எனக்கு சுவரொட்டிகள் கொடுத்தது ஹிந்து ஜனநாயக முன்னணியை சேர்ந்த சென்னை மாநகரச் செயலாளர் சத்தியநாதன் என்பவர் தான்" என்று வாக்குமூலம் கொடுத் துள்ளார். அவரிடம் விசாரணை செய்ததில்அவர் ஏற்கெனவே பல மதக்கலவர வழக்குகளில் கைதாகி பிணையில் வெளியே வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

அய்யப்பன் கோவிலில் பெண் களை அனுமதித்ததற்கு எதிராக தாக்குதல் நடத்திய வழக்கு மற்றும் ஆசிரியர் கி.வீரமணி வீட்டை முற்றுகையிட்ட வழக்கில்  கைதாகி, தற்போது பிணையில் உள்ளார் அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில்  அவர் சிவகுருநாதன் என்ற நபரின் பெயரை சொல்லி இருக்கிறார். அவரும் பல்வேறு ஜாதி கலவர வழக்குகளில் சிக்கி உள்ளார். 2014ஆம் ஆண்டில் இவர் ஜாதி கலவர வழக்கில் கைதும் செய்யப்பட்டு உள்ளார். மூன்று பேருமே ஏற்கெனவே பல குற் றங்களை செய்துள்ள நிலையில் அவர்களை  கைது செய்து விசா ரணை செய்துள்ளனர்.  இந்த விசா ரணையின் முடிவில் பாஜக தலை வர் அண்ணாமலையின் உதவியா ளர் கிருஷ்ணகுமார் முருகன் சொல் லித்தான் இப்படி சுவரொட்டிகள் ஒட்டியதாக அவர்கள் 3 பேரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் .

அதில் "அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன்தான் எங்களிடம் இப்படி சுவரொட்டிகள் ஒட்டச் சொன் னார். சுவரொட்டிகள் அச்சடித்து கொடுத்தது அவர்தான். ஊடகம் ஒன்றில் அண்ணாமலைக்கு எதி ராக அட்டைப்படம் வந்த சர்ச் சையானது. அதை போலவே பொய்யான சுவரொட்டிகளை முதலமைச்சரை விமர்சித்து அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இப்படி அடித்து, எங்களிடம் ஒட்ட சொன்னார். இதற்காக 35 ஆயிரம் ரூபாயை அவர் எங்களிடம் கொடுத்தார்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

No comments:

Post a Comment