திருவாரூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

திருவாரூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

திருவாரூர், செப்.4  திருவாரூர் தெற்கு வீதியில் நடை பெறும் சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் பங்கேற்க மன்னை விரைவுவண்டியில் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி,  தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, சிபி.அய்.(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு  திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று (4-09-2022) அதிகாலை 4 மணிக்கு திராவிடர் கழக திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன் தலைமையில்,கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

தி.மு.க திருவாரூர் நகர செயலாளர் வாரை பிரகாஷ்,  பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் இரா.சிவக் குமார், மாவட்டத் துணைத்தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசு, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீரையன், திருவாரூர் நகர செயலாளர் ப. ஆறுமுகம்,  மண்டல செய லாளர் கிருஷ்ண மூர்த்தி, தி.மு.க. நகர பொருளாளர் ரஜினி சின்னா மாவட்ட ப.க தலைவர் அரங்க ஈ.வெ.ரா, பகுத்தறி வாளர் கழகம் கார்த்தி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், கழக தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் வி.சி.வில்வம், கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, கிடாரங்கொண்டான் செல்வேந்திரன், சிவராமன், சமரன், சதாசிவம் இலவங்கார்குடி திராவிடமணி, ஜெயக் குமார் உள்ளிட்ட கழகத்தோழர்கள் வருகை தந்து பயனாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

திருப்பூர் மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து விடுதலை சந்தா தொகை ரூ.25,000 வழங்கினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (பெரியார் திடல் - 3.9.2022).


இலால்குடி, கரூர், தாராபுரம், திருப்பூர், கோயமுத்துர்,கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு, நாமக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், காரைக்குடி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 28-08-2022 முதல் 02-09-2022 வரை சுற்றுப்பயணத்தில் கழகப் பொறுப்பாளர்களிடமிருந்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் மூலமாகத் திரட்டப்பட்ட விடுதலை சந்தா தொகை ரூ.4,83,850 திருவாரூரில் 

தமிழர் தலைவர் ஆசிரியரிடம் முகவரிகளுடன் வழங்கப்பட்டது. உடன்: மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் 

இரா.செந்தூரப்பாண்டியன். (4-09-2022)


நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் திருக்குவளை இல.மேகநாதன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா நான்காவது தவணையாக ரூ.1,15,700 வழங்கினார். 

உடன்: மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜ்மோகன் (02-09-2022)


 திராவிட முன்னேற்றக் கழக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் பழ. செல்வகுமார், சென்னை தென் மேற்கு மாவட்ட அமைப்பாளர் என்.எஸ். பாலசுப்பிரமணியன், சென்னை வடகிழக்கு மாவட்ட அமைப்பாளர் லயன் தீனதயாளன், சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பி. வெங்கடேசன், சென்னை தெற்கு மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜி.வி. நாகவள்ளி பிரபாகரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன், திருவள்ளூர் மத்திய மாவட்ட அமைப்பாளர் டாக்டர் அய். ஜாக்கப், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் பூண்டி அருண்குமார்  ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் 10 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.20,000அய் வழங்கினர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (பெரியார் திடல் - 3.9.2022)

No comments:

Post a Comment