Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
“எனது ஒரே தலைவர் பெரியார்தான்!”
September 04, 2022 • Viduthalai

அறிஞர் அண்ணா செய்த பிரகடனம்!

திருச்சி மாநகரில் 07.06.1967 அன்று பெரியார் மாளி கையில் பெரியாரால் நடத்தி வைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் மகள் உஷாவின் திருமணத்தில் கலந்து கொண்டு - முதலமைச்சர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரை இதோ: "என்னுடைய பொது வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரே தலைவரான பெரியார் அவர்களே!

நமது தமிழ்நாட்டில் மட்டும் வயதானவர்கள் வீட்டிற்குப் பெரியவர்களாக வீட்டிலேயே இருப்பார் கள். அவரது பிள்ளைகள் வெளியூர்களில் ஒருவர் டாக்டராகவும் ஒருவர் எஞ்சினீயராகவும் ஒருவர் வக்கீலாகவும் இருப்பர். அந்தப் பெரியவர் தன் மகன் களைச் சுட்டிக்காட்டி, அதோ போகிறானே அவன்தான் பெரியவன், டாக்டராக இருக்கிறான். இவன் அவனுக்கு அடுத்தவன் எஞ்சினீயராக இருக்கிறான். அவன் சிறிய வன் வக்கீலாக இருக்கிறான். இவர்கள் எல்லோரும் எனது பிள்ளைகள் என்று கூறிப் பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவார்.

அதுபோலப் பெரியவர்கள், நம்மாலே பயிற்சியளிக் கப்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்தாலும், அவன் என்னிடமிருந்தவன், இவன் என்னுடன் சுற்றி யவன் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய பெருமை இந்தியாவிலேயே, உலகிலேயே பெரியார் ஒருவருக் குத்தான் உண்டு.

காங்கிரசில் இருப்பவர்களைப் பார்த்து, தி.மு.க.வில் இருப்பவர் களைப் பார்த்து, கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் கட்சியில் இருப்பவர்களைப் பார்த்து, "இவர்கள் என்னிடமிருந்தவர்கள். இவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்தேன், இன்று இவர்கள் சிறப்போடு இருக் கிறார்கள்" என்று சொல் லிக்கொள்ளக்கூடிய பெருமை அவர் ஒருவரையே சாரும்.

அவர் என்னுடைய தலைவர். நானும் அவரும் பிரிகிறபோது கூட நான் அவரையேதான் தலை வராகக் கொண்டேன். வேறு ஒரு வரைத் தலைவராகப் பெற வில்லை . அந்த அவசியமும் வரவில்லை .

அன்று ஏற்றுக்கொண்டது போல் இன்றும் அவ ரையே தலைவராகக் கொண்டு தான் பணி செய்து வருகிறேன். சுயமரியாதை இயக்கம் ஒழுக்கச் சிதைவு இயக்கம் அல்ல. மனித சமுதா யத்தை ஒழுக்க நெறிக்குக் கொண்டு வந்து முன்னேற்ற வேண்டும் என்பதற் காகப் பாடுபடும் இயக்கமாகும். சுயமரி யாதை இயக்கம் பகுத்தறிவு இயக்கம். தமிழ் இயக்கத்தோடும் பிணைத்துக் கொண்டது.

பகுத்தறிவுவாதிகளாகிய நாங்கள் பகுத்தறிவால் தான் மனித சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவர முடியும். அதற்கு எதிராக இருக்கிற மதம், புராணம் இவைகள் எல்லாம் மக்களின் எண்ணத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதற்காகப் பாடு பட்டு வருகிறோம். சுயமரியாதை இயக்கம் வளர்ந்து பெண் ணுரிமையைப் பெற்றிருக்கிறது. ஆலயங்க ளில் நுழையும் உரிமையைப் பெற்றிருக்கி றது. இன்னும் பல உரிமைகளைத் தமிழர்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழர்களின் குடும்பங்களில் பல சுயமரியாதைத் திருமணங்களை ஏற்று நடத்தியிருக்கின்றன. சட்டப்படி செல்லாது என்று தெரிந்தும் அதனால் ஏற்படும் தொல் லைகளைப் பொருட்படுத்தாது. மக்க ளுக்காகத்தானே சட்டம் என்பதை உணர்ந்து, சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட வர்கள், நமது வணக்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்.

எங்களது ஆட்சியில், விரை வில் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படிச் செல் லத் தக்கதாகச் சட்டம் கொண்டு வர இருக்கிறோம். ஏற்கனவே நடத்தி வைக்கப்பட்ட திருமணங்களும் சட்டப்படிச் செல்லத் தக்கதாகும் என்று சட் டம் கொண்டுவர இருக்கிறோம். பெரியாரவர்கள் நீண்ட நாட்க ளாக எதிர்பார்த்துக் கொண்டிருந் ததை நாங்கள் வந்து செய்யும் வாய்ப்புக் கிடைத்தமைக்காகப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நெடுந்தொலைவு பிரிந்து சென்றிருந்த மகன் தன் தந்தைக்கு மிகப் பிடித்தமான பொருளைக் கொண்டு வந்து கொடுப்பதைப் போல, நாங்கள் பெரியாரிடம் இக்கனியைச் (சட்டத்தை சமர்ப்பிக்கின்றோம்.

எனக்கு முன் இருந்தவர்கள் கூட இதைச் செய் திருக்க முடியும். எனினும் நான் போய் நடத்த வேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்த மைக்கு பெருமகிழ்ச்சியடை கிறேன்."

முதலமைச்சர் அண்ணாவின் இந்த உரையைக் கேட்ட பெரியார் அவர்கள், மகிழ்ச்சியின் உச்சக்கட்டத் திற்கே சென்று இந்த உரையை "நான் அருள் வாக்கா கவே கருதிப் பாராட்டுகிறேன்" - எனப் புகழ்ந்தார்.

நன்றி : ‘கீற்று' இணையதளம்.

நன்றி: 'முரசொலி', 4.9.2022

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn