பிஜேபி தலைவர் நட்டாவுக்குப் பதிலடி! கட்டடத்தைக் காணவில்லையே! கட்டாந்தரைதான் காணப்படுகிறது நாடாளுமன்ற உறுப்பினர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

பிஜேபி தலைவர் நட்டாவுக்குப் பதிலடி! கட்டடத்தைக் காணவில்லையே! கட்டாந்தரைதான் காணப்படுகிறது நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மதுரை,செப்.24- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருந்த நிலையில், நேரிடையாகவே தோப் பூருக்கு சென்று எய்ம்ஸ் பணி குறித்து அம் பலப்படுத்தியுள்ளனர் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95விழுக்காடு நிறைவடைந்து உள்ளன. மாணவர் சேர்க்கை இடங்களும் 100இல் இருந்து 250 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்” என்றார். 

ஜே.பி.நட்டாவின் இந்த புதிய தகவல் மதுரை மக்களை அதிரவைத்துவிட்டது. இந் நிலையில், எய்ம்ஸ் கட்டுவதற்கான இடத்தை நேரில் பார்வையிட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் "95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே?" என்ற கேள்வியோடு பதாகை ஏந்தி நிற்கும் ஒளிப்படங்களை வெளியிட்டுள் ளனர். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன், "உயர்த்தப் பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடிய வில்லை. ஒப்பந்தப் புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம்" என்று விமர்சித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் 

சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் தோப்பூருக்கு நேரிடையாகவே சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சொன்ன பொய் தகவலை அம்பலப்படுத்தியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


No comments:

Post a Comment