கடவுச் சீட்டு: காவல்துறை ஆட்சேபனை சான்றை பெற புதிய வழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

கடவுச் சீட்டு: காவல்துறை ஆட்சேபனை சான்றை பெற புதிய வழி

சென்னை, செப்.30 கடவுச்சீட்டு தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப் பட்டுள்ளது.  ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொது மக்களுக்கு உதவும் வகையில் கடவுச்சீட்டு தொடர்பாக காவல் துறையின் ஆட்சே பனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப் பட்டுள்ளது. இதன்படி காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை அஞ்சல் நிலையங்களில் இயங்கும் கடவுச்சீட்டு சேவை மய்யங்களில் இணையம் மூலம் விண்ணப்பித்து பெற முடியும்.    இந்த நடைமுறை புதன்கிழமை (28.9.2022) முதல் அமலுக்கு வந்தது.  அஞ்சல் நிலைய கடவுச்சீட்டு சேவை மய்யங்களில் வர உள்ள இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு வெளி நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உத்ரவாதம் தராது. காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று குறித்த பிரச்சினைகளை தீர்க்க மட்டுமே உதவும் என்று சென்னை மண்டல துணை கடவுச்சீட்டு அதிகாரி எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அக்.9இல் தி.மு.க. பொதுக்குழு

சென்னை,செப்.30- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு, தி.மு.க. 15ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 9-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்” நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப் பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். பொருள் : தலைவர், பொதுச்செய லாளர், பொருளாளர் ஆகியோர்களுக்கான தேர்தல் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர் தல். இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

சைலேந்திரபாபு முஸ்லீம் அமைப்பிடம் சம்பளம் வாங்குகிறாரா? எச் ராஜா

சென்னை, செப்.30 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவிடம் ஊடகவியலா ளர்கள் கேள்வி கேட்ட போது நீதிமன்றமே அனுமதி கொடுங்கள் என்று கூறிவிட்டது, ஆனால் காவல் துறை தடைவிதிக்கிறது, இந்த டிஜிபி யாருக்கு வேலை பார்க்கிறார்? யாரிடம் சம்பளம் வாங்குகிறார்?

 அரசிடமிருந்து வாங்குகிறாரா? அல்லது (தடைசெய்யப்பட்ட சமூகவிரோத இயக்கமான) பிஎப்அய்-யிடமிருந்து சம்பளம் வாங்குகிறாரா? என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என்று கூறினார். 

எச். ராஜா 2018 ஆம் ஆண்டு  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது "ஹைகோர்ட்டாவது மயிராவது", "காவல்துறை ஒரு ஊழல்துறை", "டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது" நீங்கெல்லாம் யூனிபார்ம கழட்டிட்டு வேற வேலைக்கு போங்க, போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், கிறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன் என பல தேவையற்ற பேச்சுக்களை பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 பின்னர் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment