தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் ஆண்டிப்பட்டியில் குருதிக்கொடை முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் ஆண்டிப்பட்டியில் குருதிக்கொடை முகாம்

ஆண்டிப்பட்டி, செப். 30- தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டியில் மாபெரும் கொள்கைத் திருவிழா - அறிவு ஆசான் சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியாரின் 144 - ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக ஆண்டிப்பட்டி நகர திராவிடர் கழகம் சார்பாக 21-ஆம் ஆண்டு மாபெரும் குருதிக்கொடை முகாம் தேனி அரசு மருத்துவ மனை குருதி வங்கிக்கு நன்கொடையாக 105 யூனிட் வழங்கப்பட்டது. அன்று மட்டும் 38 லிட்டர் குருதி சேகரிக்கப்பட்டது.

நிகழ்விற்கு ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப் பினர் ஆ. மகாராசன் தலைமை தாங்கினார்.  தேனி மாவட்ட கழக தலைவர் ச.இரகுநாகநாதன், தேனி மாவட்ட கழக செயலாளர் பூ.மணிகண் டன், பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட கழக அமைப்பாளர் செ.கண்ணன் வரவேற்றார்.

ஆண்கள் குருதிக்கொடை முகாமை மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு.சேகர் துவங்கி வைத்து சிறப்பித்தார். பெண்கள் குருதிக் கொடை முகாமை பொதுக்குழு உறுப்பினர் போடி பு. பேபி சாந்தாதேவி துவக்கி வைத்தார். 

குருதி பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிறப்பு ரையாக கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். முதல் குருதிக் கொடையை வழங்கிவர்கள் தேனி மாவட்ட கழக துணைத் தலைவர் ஸ்டார்.சா.நாகராசன், மாநில மாணவர் கழகம் துணைச் செயலாளர் ஸ்டார்.நா.ஜீவா, ஆண்டிப்பட்டி நகர செயலாளர் இரா.ஆண்டிச்சாமி மற்றும் பெண்கள் பிரிவில் ஆ.முத்து மீனா குருதிக்கொடை வழங்கினர். முகாமில் கணவன்-மனைவி, அப்பா-மகன்கள் அம்மா-பிள்ளைகள், கூலித்தொழிலாளிகள், மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவ மாண விகள் என நிகழ்வில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இதில் குருதி கொடுக்க தகுதி உள்ள 105 நபர்கள் குருதிக்கொடை வழங் கினர். 

தி.மு.க சிறப்பு அழைப்பாளர்கள் : ஆண்டிப் பட்டி பேரூர் மன்ற தலைவர் பொன்.சந்திரகலா தி.மு.க நகர் இளைஞர் அணி அமைப்பாளர் ந.பொன்னுத்துரை, ஆண்டிப்பட்டி மேனாள் நகர் மன்ற தலைவர் ஆ.இராமசாமி.

11ஆவது வார்டு கவுன்சிலர், தி.மு.க ஆண்டிப்பட்டி பேரூர் செயலாளர் குருதிக் கொடைஞர் பா.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வரவேற்பு குழுவில் ஆண்டிப் பட்டி நகர் கழகத் தோழர்கள் வெ.ஜோதி, ஓ.அன்னக்கொடி, ஆந்திரா சோ.குட்டி, மு.விவேக்குமார், இரா.சதீஷ்குமார், பெ.சுரேஷ், ப.மகேஸ்வரன், ப.கலையரசன், மதுரை பாலா பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஸ்டார் அறக்கட்டளை சார்பில் பேரீச்சம்பழம் பழங்கள் வழங்கப்பட்டது, உணவு வழங்கியவர் ரா. இந்திரா ரமணா ஜவுளி உலகம் தேனி. நிகழ்ச்சி ஏற்பாடு: ஆண்டிப்பட்டி நகர் திராவிடர் கழகம், தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம், நோபிள் டோனஸ் கிளப். ஆண்டிபட்டி தேனி மாவட்டம்.

No comments:

Post a Comment