பூமிமீது மோதும் விண்கற்களை விண்கலத்தை மோதச் செய்து பாதையை மாற்றும் சோதனை வெற்றி - நாசா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

பூமிமீது மோதும் விண்கற்களை விண்கலத்தை மோதச் செய்து பாதையை மாற்றும் சோதனை வெற்றி - நாசா

வாசிங்டன், செப்.28 பூமியின் மீது மோதக் கூடிய விண்கற்களின் மீது விண்கலத்தை மோதி, அவற்றின் பாதையை மாற்றுவ தற்கான முதல் கட்ட சோதனையை நாசா வெற்றிகரமாக செய்துள்ளது.

விண்வெளியில் ஏராளமான பிர மாண்ட விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை பூமியின் மீது மோதி பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் அதிகமாக உள்ளன. சமீபத்தில் கூட, சில பிரமாண்ட விண்கற்கள் பூமிக்கு நெருக் கமாக வந்து சென்றன. இந்நிலையில், பூமியை நோக்கி மோதக் கூடிய வகையில் வரும்  விண்கற்களின் மீது விண்கலத்தை அதிக வேகத்தில் மோதச் செய்து, அவற்றின் பாதையை மாற்றுவதற்கான சோதனையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா ஈடுபட்டுள்ளது. இதற்காக, ‘இரட்டை விண்கல் திசை திருப்பும் சோதனை’ (டார்ட்) என்ற பெயரிலான  விண்கலத்தை, 9 மாதங் களுக்கு முன் அது ஏவியது.

இது, விண்வெளியில் 70 லட்சம் மைல்களுக்கு  சுற்றிக் கொண்டிருக்கும் 760 மீட்டர் சுற்றளவு கொண்ட ‘டிடிமோஸ்’ என்ற  பிரமாண்ட விண் கல்லை நோக்கி சென்றது. இந்த விண்கல்லின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் மார்போஸ் என்ற சிறிய கோளை, இது முதலில் குறி வைத்தது. 22 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து, இதன் மீது டார்ட் விண்கலம் மோதியது. இதனால், இந்த விண்கல் டிடிமோஸ் விண்கல்லின் சுற்றுப் பாதை யில் இருந்து விலகி,  புதிய சுற்றுப்பாதைக்கு  சென்றது. இதன் மூலம், விண்கற்களின் பாதையை மாற்றும் நாசாவின் முதல் கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளது


No comments:

Post a Comment