பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகள்

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

புதுடில்லி, செப். 28 பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளவர்களுக்கான இட ஒதுக்கீடு ஏழைகளில் ஏழைகளுக்கு பயனளிக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் மிகமிக அதிக அளவில ஆயிரக்கணக்கானஆண்டுகளாப் புறக்கணிக்கப்பட்ட பிரிவு  மக்களுக்கு மறுக்கப்படுகிறது என்றும் இந்த இட ஒதுக்கீட்டில் என்ன நியாயம் இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

103 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டு உள்ள இந்த 10விழுக்காடு இட ஒதுக்கீட்டின் பயன்களைப் பெறுவதை தாழ்த்தப்பட்ட பழங்குடியின இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தடுத்து மறுக்கப் படுகின்றனர். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏற்கெனவே 50விழுக்காடு   இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்ற வாதத்தின் மூலம் இந்த  10விழுக்காடு    பயனைப் பெறுவதில் இருந்து அவர்கள் தடுக்கப்பட்டதை அரசு நியாயப்படுத்துகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டின் பயன்களை பெற தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை விலக்கி வைக்கப் பட்டுள்ளதன் மூலம் நடுத்தர வருவாய் பிரிவில் உள்ள உயர்ஜாதியினர் மட்டுமே பெற இயலும் என்பதாக ஆக்கிவிடுகிறது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.  

பழங்குடியின மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் ஏழைகளில் படு ஏழைகளாக உள்ளனர். பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்று வரும்போது அவர்கள்தான் ஏழைகளிலும் மிகமிக ஏழைகளாக இருப்பவர்கள் ஆவர். ஆனால் அவர்கள் ஒட்டு மொத்தமாகப் பெறும் இட ஒதுக்கீடு வெறும்  7.5 விழுக்காடு  மட்டும்தான். இட ஒதுக்கீட்டுக்கான இடம் அந்த அளவில் மட்டுமே இருப்பதால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற இயலாதவர்களாக உள்ளனர். 

ஆமாம். நீங்கள்தான் ஏழைகளிலும் ஏழைகளாக இருப்பவர்கள் என்றாலும் உங்கள் இட ஒதுக்கீட்டுக்கான இடத்தை நாங்கள் நிரப்பிவிட்டோம் என்று ஒரு சமத்துவத்தை போதிக்கும் அரசமைப்பு சட்டம் கூறுவதும் ஒரு நல்ல கருத்துதான். 

இந்த பொருளாதார நிலையில் பின்தங்கியிருப்பவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் அரசமைப்பு சட்டப்படி பழங்குடியின தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கமாட்டோம். உயர்ஜாதி மக்களுக்கு மட்டும்தான் தருவோம் என்று கூறுகிறீர்களா என்று தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்களின் தலைமையிலான அரசமைப்பு சட்ட அமர்வில் உள்ள நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி எஸ். ரவீந்திரபட் ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய சொலிசிடர் ஜெனரல் துஷார்மெஹ்தாவைக் கேட்டார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்ற கருத்து விளக்க இயலாத குழப்பமானது. ஆனால் சமூக அளவில் பின்தங்கியவர்கள் யார் என்பதை வம்சாவளி, ஜாதி, இனம், தொழில்களின் அடிப்படையிலும் அந்த மக்கள் எங்கிருந்து  வந்தார்கள் என்பதில் இருந்தும் வெகு எளிதாகக் கண்டறிந்து விடலாம். சமூக அளவில் பின்தங்கியிருப்பது என்பதில் ஓரளவுக்கான நிலைத் தன்மை உள்ளது. ஆனால் அதற்கு மாறாக பொருளாதார அளவு கோல் என்பது ஒரு தற்காலிகமான நிலைப்பாடுதான் என்று தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறினார்.

பொருளாதார அளவில் பின்தங்கியிருப்பது என்பதை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதல்கள் ஏதுமில்லை என்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறினார். கல்வி மற்றும் சமூக அளவில் பின்தங்கியிருப்பது என்பதில் ஒரு குறிப்பிட்ட தளர்வுத் தன்மை சேர்க்கப்பட்டுள்ளது என்றும் இன்று சமூக அளவில் பின்தங்கியிருக்கும் ஒரு சமூகம் 10  ஆண்டுகளுக்குப் பிறகும் அவ்வாறு இல்லாமல் போகக் கூடும் என்று வாதாடிய துஷார்மெஹ்தா இந்த சட்டத் திருத்தம் அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தி   உள்ளது என்று கூறினார். பொருளாதார அளவில் பின்தங்கியிருப்பது என்பதை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதல்கள் ஏதுமில்லை என்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறினார். ஆனால் அது எவ்வாறு பலப்படுத்தி இருக்கிறது என்பதைப் பற்றி அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

-தி இந்து, 27.9.2022

தமிழில்: த.க.பாலகிருஷ்ணன்,

பொருளாதார அடிப்படையில் 

10 விழுக்காடு இட ஒதுக்கீடு 

அரசமைப்பு சட்டத்தின் மீதான ஒரு மோசடி  

சென்னை  உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி சந்துரு 

பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளவர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அரசமைப்பு சட்ட 103 ஆவது திருத்தம் - அதன் மீதான ஒரு மோசடி என்று மேனாள் சென்னை  உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

கொச்சியில்  நடைபெற்ற மேம்பட்ட சட்டக் கல்வி மற்றும் ஆய்வுகளுக்கான தேசிய பல்கலைக் கழகத்தில் தாட்சாயினி வேலாயுதம் நினைவு உரை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு கூறினார். மேலும் இந்திய நீதித்துறை சமூக நீதிப் பாதைக்கு இடையூறாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு 20 நூற்றாண்டு களுக்கும் மேலாக சமூக வாழ்க்கையில் ஆதிக் கம் செலுத்தி வரும் மேல்ஜாதியினருக்காகவே செய்யப்பட்டுள்ளதாகும். உயர்ஜாதியினருக்கான விசேட இட ஒதுக்கீடு என்ற கருத்து அசல் அரச மைப்பு சட்டத்தில் எங்கேயும் குறிப்பிடப்பட வில்லை. இட ஒதுக்கீட்டுப் பயன் பெறுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார அளவுகோல் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் அல்லாமல் நியாயமான அளவில் வசதி படைத்த உயர்ஜாதி நடுத்தரப் பிரிவு மக்களுக்கும் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment