தமிழ்நாட்டில் புதிதாக 492 பேருக்கு கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 492 பேருக்கு கரோனா தொற்று

சென்னை, செப்.19 தமிழ்நாட் டில் புதிதாக 492 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நேற்று (18.9.2022) புதிதாக 259 ஆண்கள், 233 பெண்கள் என மொத்தம் 492 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள் ளது. இதில் அதிகபட்சமாக சென் னையில் 109 பேர், கோவையில் 50 பேர், செங்கல்பட்டில் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் பாதிப்பு இல்லை, அவற்றை தவிர அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 

மேலும், 12 வயதுக்குட்பட்ட 25 குழந்தைகளுக்கும் , 60 வய துக்கு மேற்பட்ட 110 முதியவர் களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 431 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா பாதிப் புக்குள்ளாகி 4 ஆயிரத்து 926 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை யில் 2 ஆயிரத்து 326 பேரும், கோவையில் 472 பேரும், செங் கல்பட்டில் 317 பேரும் சிகிச்சை யில் இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ...  

 இந்தியாவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 4 ஆயிரத்து 858 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. 17.9.2022 அன்று 5 ஆயிரத்து 664 ஆக இருந்த கரோனா பாதிப்பு நேற்று (18.9.2022)  4 ஆயிரத்து 858 ஆக குறைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,45,34,188 லிருந்து 4,45,39,046 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 4,735 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.  இதன் மூலம் இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந் தோர் எண்ணிக்கை 4,39,57,929 லிருந்து 4,39,62,664 ஆக உயர்ந் துள்ளது. 

மேலும் இந்தியாவில் கரோ னாவுக்கு ஒரே நாளில் 18 பேர் பலியாகினர். இதுவரை 5,28,355 பேர் உயிரிழந்தனர். நாடு முழு வதும் கரோனாவால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண் ணிக்கை 47,922 லிருந்து 48,027 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 216 கோடியே 70 லட்சம் 'டோஸ்' கரோனா தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 13,59,361 கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment