அக்டோபர் முதல் தமிழ்நாட்டில் 13 வகைத் தடுப்பூசிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

அக்டோபர் முதல் தமிழ்நாட்டில் 13 வகைத் தடுப்பூசிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை,செப்.19- தமிழ்நாட் டில் அக்டோபர் முதல் அரசு மருத்துவமனைகளில் புதன் கிழமையிலும், பள்ளிகளில் வியா ழக்கிழமையிலும் கரோனா உள் ளிட்ட 13 வகையான தடுப்பூசிகள் போடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 50 ஆயிரம் இடங்களில் 37-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று (18.9.2022) நடந்தது. சென்னை தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த முகாமை மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி 96.50 சதவீதம் பேருக்கும், 2ஆம் தவணை தடுப்பூசி 91.10 சதவீதம் பேருக்கும் போடப்பட் டுள்ளது. பூஸ்டர் தவணை தடுப்பூசி 4.25 கோடி பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டு, இதுவரை 80,705 பேருக்கு போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டா யம் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடுவது தொடருமா என்பது சில நாட்களில் தெரியும்.

தடுப்பூசி போடுவதில் அக் டோபர் மாதம் முதல் சிறிய மாற்றம் செய்யப்படுகிறது. அதன் படி, புதன்தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவமனைகள் வரை 11,333 இடங்களிலும், வியாழன் தோறும் பள்ளிகளிலும் கரோனா தடுப்பூசி உட்பட 13 வகையான தடுப்பூசிகள் போடப்பட உள் ளன. இந்த முகாம்களில் கர்ப் பிணிகள், பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

1,044 பேர் பாதிப்பு

எச்1 என்1 இன்புளுயன்சா காய்ச்சல் என்பது பருவகாலங் களில் வழக்கமாக வரக்கூடியது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 1,044 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 3 அல்லது 4 நாட்களில் குணமாகி விடும். காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். அதற்காக, பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் தலைவர்களின் பேட் டிகள், அறிக்கைகளால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரத் துறை இயக் குநர் செல்வவிநாயகம் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment