25 இடங்களில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் பகுத்தறிவு பகலவன் பிறந்த நாள் விழா ஊற்றங்கரை கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

25 இடங்களில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் பகுத்தறிவு பகலவன் பிறந்த நாள் விழா ஊற்றங்கரை கலந்துரையாடலில் தீர்மானம்

ஊற்றங்கரை, செப். 13- ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் செப்டெம்பர் மாதம் 11 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் ஊற்றங்கரை நெடுஞ்சாலை துறை பயணியர் மாளிகையில் நடை பெற்றது.

ஊற்றங்கரை ஒன்றிய செயலா ளர் செ.சிவராஜ் வரவேற்புரையாற்ற  ஊற்றங்கரை ஒன்றிய அமைப்பா ளர்  அண்ணா.அப்பாசாமி  தலைமை தாங்கி உரையாற்றினார். தருமபுரி மண்டல செயலாளர் பழ.பிரபுவும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்   சித.அருளும் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து வழிகாட்டல் உரை வழங்கினர். மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் சீனிமுத்து. இராஜேசன், ஊணாம்பாளையம் சரவணன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.

இக் கூட்டத்தில் பின்வரும் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் “விடுதலை”யின் ஆசிரியர் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 60,000 விடுதலை சந்தாக்கள் திரட்டும் வகையில் ஊற்றங்கரை ஒன்றியம்  சார்பில் முதல்கட்டமாக 160 விடுதலை சந்தாக்களை திரட்டி அளித்த கழக தோழர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள் வதுடன் விடுதலை சந்தாக்களை அளித்த கல்வியாளர்கள்,  அனைத்து கட்சி பெருமக்கள் ,ஊற்றங்கரை பொதுமக்கள் உள்ளிட்ட அனை வருக்கும் இக்   கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

2. ஊற்றங்கரை ஒன்றியம்  சார்பில்  இரண்டாம் கட்டமாக  விடுதலை சந்தாக்களை திரட்டி  வருகிற செப்டம்பர் 23 அன்று ஊற்றங்கரைக்கு வருகை தரும் மாநில அமைப்பு செயலாளர் உரத்த நாடு  குணசேகரனிடம்  வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

3 செப்டெம்பர் 17 அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர் களின் 144 ஆம் பிறந்தநாளை யொட்டி ஊற்றங்கரை ஒன்றியம் முழுவதும் பல இடங்களில் அய்யா வின் படத்தை வைத்து மாலை அணிவித்து  கொள்கை திருவிழா வாக நடத்துவது எனவும் ஊற்றங் கரை நகரில் 25  இடங்களில் அனைத் துக் கட்சியினரையும் அழைத்து  பெரியார் அவர்கள் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்துவது எனவும் முடிவு செய் யப்படுகிறது.

4. தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்த சமூகநீதியின் சரித்திர நாயகர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன் ஊற்றங்கரை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் ,கல்வி நிலையங்களில் அரசின் ஆணைக்கு ஏற்ப சமூக நீதி உறுதி மொழியினை எடுக்க வேண்டுமாய் அனைவரையும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

5. ஊற்றங்கரை நகரில் பெரியார், அண்ணா, கலைஞர், ஆசிரியர் வீரமணி ஆகிய தலைவர்களின் நூல்கள் திராவிட இயக்க நூல்கள்  இதழ்கள் எளிதில் கிடைக்கும் வகையில் திராவிட புத்தக நிலையம் மற்றும் பெரியார் படிப்பகம் உருவாக்க முயற்சிகள் மேற் கொள்ள பொறுப்பாளர்களை இக் கூட்டம் கேட்டு கொள்கிறது.

6 .ஊற்றங்கரை நகரத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக எடுக்கபட்ட தகவல் பலகையை மீண்டும் நிறுவுவது எனவும் ஊற் றங்கரை ஒன்றியத்தில் மறைந்த சுய மரியாதைச் சுடரொளிகளுக்காக தந்தை பெரியார் சிலை பீடத்தில் வருகிற திசம்பர் 2 க்குள் சுயமரி யாதை சுடரொளிகள் நினைவு கல்வெட்டு பதிப்பிப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

7. மேலும் இக்கூட்டத்தில் ஊற் றங்கரை ஒன்றிய இளைஞரணிக்கு புதிய பொறுப்பாளர்களாக கோ.சரவணன் ஒன்றிய இளைஞரணி தலைவர்,  ச. சிவகுமார் ஒன்றிய இளைஞரணி செயலாளர், கோ. விக்னேஷ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆகியோர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் நிய மிக்கப்பட்டனர்.

8. விடுதலை  நாளிதழுக்கு  ஊற்றங்கரை பகுதி செய்திகள், கழக நிகழ்வுகள் ஒளிப்படங்கள் தொகுத்து அனுப்பும் பொறுப்பிற்கு   சீனி.முத்து ராஜேசன் ஒன்றிய திராவிடர் கழ்கம் சார்பில் நிய மிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment