முகச்சிதைவுக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவுக்கு இலவச வீடு, படிப்பு செலவை அரசே ஏற்கும்! - அமைச்சர் நாசர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

முகச்சிதைவுக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவுக்கு இலவச வீடு, படிப்பு செலவை அரசே ஏற்கும்! - அமைச்சர் நாசர்

சென்னை, செப். 13- பெற்றோ ரின் வேண்டுகோளை ஏற்று, சிறுமியின் முகச் சிதைவு நோய்க்கு  அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்ட நிலை யில், தனியார் மருத்துவ மனையில், சிகிச்சை பெற்ற  சிறுமி டானியா நேற்று (12.9.2022) மருத் துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்றார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச் சர் நாசர்,  சிறுமி டான்யா குடும்பத்திற்கு அரச  இல வச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்ததுடன்,  சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.15 லட் சம் செலவானது எனவும் அதை முழுமையாக அரசே ஏற்கும் எனவும், சிறுமி யின் படிப்பு செலவையும் அரசு ஏற்கும் என்றும்  தெரிவித்துள்ளார்

சிறுமி டானியாவின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம்  17-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை யில், மருத்துவக் குழுவி னர் டானியாவின் வீட் டுக்குச் சென்று இதுவரை வழங்கப்பட்ட சிகிச்சை கள் குறித்துக் கேட்டறிந்த னர். பின்னர், சிறுமியை பூந்தமல்லி அருகே தண் டலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.  அங்கு டானியாவுக்கு 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சுமார் 9 மணி நேர முக சீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகர மாக செய்து முடித்தனர்.

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி நேற்று மருத்துவமனை யில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப் போது அமைச்சர் நாச ரும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அமைச் சர் சா.மு.நாசர், சிறுமி டானியாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும். சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு வழங்க பரி சீலனை செய்யப்பட்டு வருகிறது. சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.15 லட்சம் செலவானது. அதை முழுவதுமாக அரசே ஏற்கும் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment