கேரளாவை பொருளாதார ரீதியாக அழிக்க முயற்சி ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது பினராயி விஜயன் சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

கேரளாவை பொருளாதார ரீதியாக அழிக்க முயற்சி ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது பினராயி விஜயன் சாடல்

திருவனந்தபுரம்,ஆக.26- கேரளா மாநிலத்தை பொருளா தார ரீதியாக அழிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருவ தாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.  கேரள சட்டமன்றத்தில் 24.8.2022 அன்று முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது குறிப்பிட்டதாவது,

ஒன்றிய அரசு நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் வெளிச்சந்தையில் இருந்து ரூ.17 ஆயிரம் கோடி கடன் வாங்க கேரளாவுக்கு அனுமதி அளித் தது. ஆனால், கேரள அரசு நடத்தும் நிறுவனமான கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் வாங்கிய ரூ.14 ஆயிரம் கோடி கடனை கேரள அரசின் கடனுடன் சேர்த்து விட்டது. இதனால், கேரள அரசு வாங்க வேண்டிய கடன் அளவு குறை கிறது. இதன்மூலம் கேரளாவை பொருளாதார ரீதியாக அழிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. 

ஆனால், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஏர் இந்தியா ஹோல்டிங்ஸ், இந்திய ரயில்வே நிதி கழகம் ஆகியவை வாங்கிய கடன்கள், ஒன்றிய அரசின் கடனுடன் சேர்க்கப்படுவது இல்லை. இதன்மூலம், தனக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு பின்பற்றுகிறது. மேலும், கேரள உள்கட்டமைப்பு முத லீட்டு நிதி வாரியம் வெளியிட்ட கடன் பத்திரங்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதனால் கேரளாவில் வளர்ச்சிப் பணி களுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.

-இவ்வாறு அவர் பேசினார்.

கேரள நிதியமைச்சர் பாலகோபால் பேசியதாவது, கேரள அரசு வாங்க வேண்டிய கடன் அளவை ஒன்றிய அரசு குறைத்துவிட்டது. அத்துடன், 250 சொகுசுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக் காடாக குறைத்துவிட்டது. இதனால், மாநில அரசுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டில் ரூ.12 ஆயிரத்து 500 கோடி குறைந் துள்ளது. வரி குறைந்தபோதிலும், அந்த சொகுசுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவ தால், பொதுமக்களுக்கும் பலன் கிடைக்கவில்லை. எனவே, ஒன் றிய அரசுக்கு எதிராக மாநில அரசுடன் எதிர்க்கட்சிகள் கை கோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment