மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடில்லி,ஆக.31- இந்து மதத்தில் இருந்து இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு உள்ளிட்டவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மதம் மாறிய தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை அப்போதைய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நிலைப்பாட்டை தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார். அவரது வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மதம் மாறிய தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரும் விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 11-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


No comments:

Post a Comment