ஜெனீவா, ஆக.31 உலக அளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 60.69 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற் றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 60 கோடியே 69 லட்சத்து 97 ஆயிரத்து 46 ஆக அதிகரித் துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட வர்களில் 1 கோடியே 75 லட்சத்து 46 ஆயிரத்து 897 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 58 கோடியே 29 லட்சத்து 58 ஆயிரத்து 651 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 91 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment