இதுதான் பாரத புண்ணிய பூமி? 2021இல் பெண்களுக்கு எதிரான வழக்குகள் 4.28 லட்சம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

இதுதான் பாரத புண்ணிய பூமி? 2021இல் பெண்களுக்கு எதிரான வழக்குகள் 4.28 லட்சம்

புதுடில்லி, ஆக.31 கடந்த 2021-இல் பெண்களுக்கு எதிரான குற் றங்கள் தொடர்பாக 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இது முந்தைய ஆண்டைவிட 15.3% அதிகம்.

இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021ஆ-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இது, 2020-ஆம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-இல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய் யப்பட்டன. இது, 2019இ-ல் பதிவான 4.05 லட்சம் வழக்கு களைவிட 8.3% குறைவாகும்.

கடந்த 2021-இல் இந்திய தண் டனைச் சட்டத்தின் கீழ் பெண் களுக்கு எதிராக பதிவு செய்யப் பட்ட குற்ற வழக்குகளில், கணவ ரால் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்கு களின் பங்கு 31.8% ஆக (1.36 லட்சம்வழக்குகள்) இருந்தது. இது, முந்தைய 2020 உடன் ஒப்பிடு கையில் 2% அதிகம்.கணவர் அல் லது நெருங்கிய சொந்தங்களால் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட் டது தொடர்பாக பதிவு செய்யப் பட்ட வழக்குகளின் பங்கு 2020-இல் 30 சதவீதம் ஆகவும், 2019இ-ல் 30.9% ஆகவும் இருந்தன.

பாலியல் வன்கொடுமை

மேலும், 2021-இல் பெண்களை குறிவைத்து தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் பங்கு 20.8% ஆகவும், அதைத்தொடர்ந்து கடத்தல் (17.6%), பாலியல் வன் முறை (7.4%) ஆகிய பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளும் கணிச மான அளவில் இருந்தன.

2020இ-ல் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு களின் பங்கு 7.5 சதவீதம் ஆகவும், 2019இ-ல் இது 7.9% ஆகவும் இருந் தன. எண்ணிக் கைஅடிப்படையில் கடந்த 2021இ-ல் பாலியல் வன் கொடுமை தொடர்பாக 31,677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் 3,038 பேரும். 6-12 வயது வரையில் 183 பேரும், 6 வயதுக்கும் குறைவா னோர் 53 பேரும் அடங்குவர்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றம்

2021இ-ல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1.49 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020-இல் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடு கையில் இது 16.2% அதிகமாகும். 2021-இல் பதிவான குழந்தைகளுக்கு எதிரான மொத்த குற்ற வழக்கு களின் எண்ணிக்கையில் கடத்தல் தொடர்பாக பதிவான வழக்கு களின் பங்கு 45% ஆகவும், பாலியல் தொடர்பான வழக்குகளின் பங்கு 38.1 சதவீதம் ஆகவும் இருந்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment