தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விடுதலை சந்தாக்களை திரட்டி தமிழர் தலைவரிடம் அளிப்பதென மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விடுதலை சந்தாக்களை திரட்டி தமிழர் தலைவரிடம் அளிப்பதென மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

தருமபுரி, ஆக. 14- தருமபுரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 9-.8.2022 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட திரா விடர் கழக தலைவர்  வீ.சிவாஜி தலை மையில் நடைபெற்றது. 

வருகை தந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபா கரன் வரவேற்றுப் பேசினார். மேனாள் மாவட்ட பொறுப்பாளர் த.யாழ்திலீபன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணா நிதி, மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல் வன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 14ஆம் தேதி திருப்பத்தூரில் நடை பெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் விடுதலை சந்தாவை அளிப்பது குறித்து மாநில திராவிடர் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடக் கவுரையாற்றினார். பங்கேற்ற கழகத் தோழர்களின் கருத்துகளுக்கு பின் திரா விடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் விடுதலை சந்தா சேர்ப்பது எப்படி? அவர்களிடம் அணு குவது எப்படி?என்பது குறித்தும் தமி ழர்  தலைவர் அவர்களின் எண்ணப்படி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட  சந் தாவை முடித்து தருவதை முதன்மை யான பணியாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் சிறப்புரையாற்றினார்.                 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு,

தீர்மானம் 1: மாவட்ட துணை செயலா ளர் காமலாபுரம் கு.சரவணனின் வாழ் விணையர் செல்வி மறைவுக்கு இக் கூட்டம் ஆழ்ந்த வருத்தத்தையும் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: தமிழர் தலைவர் அவர்களின் 60 ஆண்டுகால விடுதலை ஆசிரியர் தொண்டிற்கு நன்றி காட்டும் வகையில் 60 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் அளிக்கும்  திட்டத்தின்படி மாவட்டத்திற்கு ஒதுக்கிய இலக்கினை முடித்து 14-.8.-2022 அன்று திருப்பத் தூரில் நடைபெற உள்ள விடுதலை சந்தா வழங்கும் நிகழ்ச்சியில் தமிழர் தலைவரிடம் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: இளைஞர் அணியை வலுப்படுத்தும் விதமாக மாவட்டத் திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் கழக இளைஞரணி திண்ணைப் பிரச் சாரம் மற்றும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4: அரியலூரில் நடை பெற்ற இளைஞரணி மாநாட்டில் பங் கேற்ற   இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றி யையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது .

தீர்மானம் 5: கீழ்க்கண்ட தோழர்களை புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப் படுகிறது. மாவட்ட இளைஞரணி தலைவர் த.யாழ்திலீபன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சிறீதரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தி.சத்யராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  வினோத் குமார், தருமபுரி நகர இளைஞரணி அமைப்பாளர் மா.அர்சுனன் ஆகி யோர் பொறுப்பாளர்களாக  நியமிக் கப்படுகிறார்கள் .

கூட்டத்தில் பங்கேற்றோர்

தருமபுரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ், மாரவாடி தலைவர் காந்தி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, நகர செயலாளர் கண்.இராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிறீதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  அர்ஜுனன், மண்டல மாணவர் கழக செயலாளர் இ.சமரசம், ப. பெரியார், மா.நிதிஷ்குமார், சூர்யா, விஜயரசு,சண்முகராஜன், த.யாழ்திலீபன்,அ. பூபதிராஜா ஆகியோர் பங்கேற்றனர்.அரியலூரில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் பங்குபெற்ற பெரியார் சமூக காப்பணி தோழர்களுக் கும், மாநாட்டில் பங்கு பெற இளை ஞர்களை திரட்டிய கழக இளைஞரணி மாணவர் கழகப் பொறுப்பாளர்க ளுக்கும் மாவட்ட கழகத்தின் சார்பில் பயனாடை  அணிவித்து சிறப்பிக்கப் பட்டது.  இறுதியாக மாவட்ட அமைப் பாளர் சி.காமராஜ் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment