சங்கராபுரம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.பச்சையப்பன் மறைவு: கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

சங்கராபுரம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.பச்சையப்பன் மறைவு: கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை

சங்கராபுரம், ஆக. 26- அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த அமைச்சரவை யில், 1967ஆம் ஆண்டு சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பின ரும், தன் தொகுதி மக்க ளுக்கு கட்சிப் பாகுபா டின்றி வேண்டிய உதவி களைச் செய்தவருமான எஸ்.பி. பச்சையப்பன் 16.08.2022 அன்று மறை வுற்றார்.

இவர் கல்லக்குறிச்சி ஒன்றிய பெருந்தலைவர், கல்லக்குறிச்சி நகர நிலவள வங்கி தலைவர், கல்லக்குறிச்சி கூட்டுறவு நகர வங்கி தலைவர், உள் ளிட்ட பல பதவிகளை வகித்து சங்கராபுரம் தொகுதி மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தங்கு தடையின்றி வழங்கி சேவையாற்றினார்.

பெரியார் மீது பற்றுக் கொண்டவர். சங்கரா புரத்தை அடுத்துள்ள சவுந்திரவல்லிபாளையம் கிராமத்தில் 1971 டிசம் பரில் கோவில் திருவிழா வின் போது, திராவிடர் கழகத் தொண்டர்கள் பெ.பாலசண்முகம், அரங்க அய்யாசாமி... உள்ளிட்டோர் தாக்கப் பட்டனர். இவ்வூருக்கு, கலகக்காரர்கள் விதித்த எதிர்ப்பையும் மீறி தந்தை பெரியாரை அழைத்து கூட்டம் போட்டவர் களில் அப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் ந நாச் சியப்பன், மேனாள் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் க.வேங்கட பதி இவர்களுடன் எஸ்.பி. பச்சையப்பனும் ஒருவரா வார்.

இவர் விடுதலை நாளேட்டின் தொடர்சி யான வாசகர். எப்போ தும் கருப்புச் சட்டையு டன் விளங்கி பெரியாரின் கொள்கைகளைக் கடைப் பிடித்தவர். அவரின் உட லடக்கமானது, அவர் விருப்பத்தின் படி எந்தச் சடங்குகளும் இல்லாமல் எளிமையாக நிறைவேற் றப்பட்டது. அவருக்கு எஸ்.பி. அரவிந்தன் என்ற வழக்குரைஞர், எஸ்.பி. அண்ணாதுரை, எஸ்.பி. அன்பரசு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.பச்சையப்பன் அவர்களுக்கு, மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலைமையில் மாவட்டச் செயலாளர் ச.சுந்தர ராசன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் த. பெரியசாமி, கல்லக் குறிச்சி நகர செயலாளர் நா. பெரியார், மூரார் பாளையம் கிளைக்கழ கத் தலைவர் இரா.செல் வமணி, மாவட்ட இளை ஞரணி துணைச் செயலா ளர் கே. முத்துவேல் ஆகி யோர் சென்று மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment