கல்லக்குறிச்சி மாவட்டத்தில் 200 மாணவர்கள் 20 மய்யங்களில் பெரியார் -1000 தேர்வு எழுத ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

கல்லக்குறிச்சி மாவட்டத்தில் 200 மாணவர்கள் 20 மய்யங்களில் பெரியார் -1000 தேர்வு எழுத ஏற்பாடு

கல்லக்குறிச்சி, ஆக. 26- பெரியார் 1000, கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அதிக மான எண்ணிக்கையில் தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணத்தின்படி மாவட்டத்தலைவர் மா.சுப்பராயன், மாவட்ட செயலாளர் ச.சுந்தரரா சன், பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.எழிலரசன், பகுத்தறிவாளர் கழக செய லாளர் வீ. முருகேசன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.முரு கன், சங்கராபுரம் ஒன்றிய கழக தலைவர் பெ.பால சண்முகம், ரிஷிவந்திய ஒன்றிய கழகத் தலைவர் அர.சண்முகம், மூரார் பாளையம் கிளைக்கழக தலைவர் இரா.செல்வ மணி, கல்லக்குறிச்சி நகர செயலாளர் நா. பெரியார், மாவட்ட மகளிர் அணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன் ஆகியோர் அடங்கிய குழு மண்டல தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் வழிகாட்டுதலின் பேரில் இம்மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை அணுகி கேட்டுக்கொண் டதின் பேரில் 2100 மாண வர்கள் வரும் 29.08.2022 திங்கட்கிழமையன்று 20 மய்யங்களில் பெரியார் -1000 தேர்வு எழுத உள்ளனர்.


No comments:

Post a Comment