சென்னை, ஆக.26- பாலியல் வன்கொடுமை குற்றத் தைச் செய்தவர்களுக்குப் பரிவு காட்டும் மோடி அர சுக்கு உரிய பாடம் புகட்டு வோம் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதா வது:- குஜராத் கலவரம் நிகழ்ந்த போது 30 பேர் கொண்ட கும்பல் 21 வயது நிரம்பிய 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை பாலியல் வன் கொடுமை செய்ததோடு, அவரது தாயார் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த னர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேருக்கு சி.பி.அய். நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த குற்றவா ளிகளைத் தான் குஜராத் பா.ஜ.க. அரசு விடுதலை செய்திருக்கிறது. இதை எதிர்த்து சமூகநல ஆர் வலர்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு பரிசீல னைக்கு வருவது சற்று ஆறுதலைத் தருகிறது. பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் வன் கொடுமை குற்றத்தைச் செய்தவர்களுக்குப் பரிவு காட்டும் மோடி அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
Friday, August 26, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment