காலாவதியான பாலிசிகள் எல்.அய்.சி. முகமை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

காலாவதியான பாலிசிகள் எல்.அய்.சி. முகமை அறிவிப்பு

சென்னை, ஆக. 21- எல்.அய்.சி. நிறுவனம், பாலிசிதாரர் களின் காலாவதியான தனி நபர் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க, சிறப்பு முகாம் ஒன்றை 17.8.2022 முதல் 21.10.2022 வரை நடத்துகிறது. தங்களது யூலிப் பாலிசிகளை தவிர மற்ற அனைத்து பாலிசிகளையும் இந்த சிறப்பு புதுப்பித்தல் முகாமில், தாமத கட்டண சலுகை யுடன் புதுப் பித்துக்கொள் ளலாம். இதன் மூலம் செலுத்தப்படாத முதல் தவணை ப்ரீமிய தேதியில் இருந்து 5 ஆண்டுகளாக ப்ரீமியம் செலுத்தப் படாத அனைத்து பாலிசிகளையும் சில வரை முறைகளுக்கு உட்பட்டு புதுப்பிக்க முடியும்.

மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு, காப்பீட்டு பாதுகாப்பை மீண்டும் பெறும் வகையில் தாமதக் கட்டணத்தில் 100விழுக் காடு சலுகை அளிக்கப் படுகிறது. மருத்துவ பரி சோதனை தேவைகளில் எவ்வித சலுகையும் இல்லை. பாலிசியை புதுப்பிக்கும் தேதியில், பாலிசி காலம் முடிவடையாத ப்ரீமியம் செலுத்தும் காலவரையில் உள்ள அனைத்து பாலிசிகளையும் (யூலிப் பாலிசிகள் தவிர) இந்த முகாம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

எதிர்பாராத விதமாக ஏற்படும் இறப்பின் கார ணமாக ஏற்படும் பொரு ளாதார இழப்பினை எதிர்கொள்ள ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் உத வுகின்றன. காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து காப்பீட்டு பாதுகாப் பினை தொடர்ந்து பெற்று குடும்பத்தின் பொருளா தார தேவைகளை பாது காத்திட எல்.அய்.சி. தங்க ளது பாலிசிதாரர்களுக்கு அளிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு இந்த சிறப்பு புதுப்பித்தல் முகாம்.

No comments:

Post a Comment