மாணவர்களிடம் ஜாதியைக் கேட்ட பேராசிரியை - விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

மாணவர்களிடம் ஜாதியைக் கேட்ட பேராசிரியை - விசாரணை

சென்னை, ஆக. 21- சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை, அவரிடம் படிக்கும் மாணவர் ஒரு வரிடம் அலைபேசியில் பேசும் உரையாடல் சமுக வலைதளங்களில் வெளி யாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த உரையாடலின் போது, கல்லூரியில் சில மாணவர்களைப் பற்றி கேட்பதும், அவர்கள் என்ன சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கேட்பதும், அதற்கு அந்த மாணவர் பதில் அளிப்பதுமாகவும் உரையாடல் நீடிக்கிறது. மேலும் உரையாடலில் பேசும் மாணவரிடமும், 'நீ எந்த சமூகத்தை சேர்ந்த வன் என்பது கூட எனக்கு தெரியாது என்று பேராசிரியை கூறிவிட்டு, ''கண்ணா நீ எந்த சமூகத்தை சேர்ந்த வன்டா''? என்று கேட்டு இருக்கிறார். இதுதவிர 'ஒவ்வொருவரின் மூஞ்சி லயும் அவன் எந்த பிரிவை சேர்ந்தவன்?' என்று எழுதி வைத்திருக்கிறது என்றும், 'நீ அந்த சமூ கத்தை சேர்ந்தவர்களிடம் ஜாக்கிரதையாக இரு' என்றும் மாணவரிடம், பேராசிரியை அந்த உரை யாடலில் பேசுவதுபோல் வெளியாகியுள்ளது. கல்வி கற்றுத்தர வேண் டிய இடத்தில் இருக்கும் கல்லூரி பேராசிரியையின் இந்த உரையாடல் பெரும் பரபரப்பை கிளப்பி உள் ளது. இதுதொடர்பாக பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, 'சம்பந்தப்பட்ட பேராசிரியையிடம் கல் லூரி ஒழுங்கு நடவடிக்கை குழு நாளை (திங்கட் கிழமை) விசாரணை நடத் தும் என்றும், அதனைத் தொடர்ந்து அவர் மீது அடுத்தகட்ட நடவ டிக்கை குறித்து முடிவெ டுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment