ஒரு காங்கிரஸ்காரரின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

ஒரு காங்கிரஸ்காரரின் கடிதம்

 

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு; இரா. குணசேகரன்   விடுதலை நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளார்.

ஆசிரியர் அறிக்கையை வாசிக்க பழக்கப்படுத்தி அந்நாளிலிருந்து "விடுதலை வாசகராக" உள்ளேன் - விடுதலை  என்னைப் போன்றோர் காங்கிரசில் - பொதுக் கருத்துகளுக்கு பதிலடி தரும், போர் வாளாக, எனக்கு விளங்குகிறது என்று எழுதியுள்ளார். 

மனுக்கள் எழுத, நல்ல தமிழில் பேச; எழுத கற்பித்த "விடுதலை" ஆசிரியர் அவர்களால் இயக்கப்படும் 60 ஆண்டு கால 60,000 சந்தா சேர்ப்புக்கு; உரத்த நாடு நகரில் அய்யா  கடை வீதியில் நடந்து சந்தா சேர்ப்பு பணிக்கு வந்த போது - எனது பங்களிப்பாக 5 ஆண்டு சந்தா ரூ.10,000/-த்தையும் எல்லை கொள்ளாத மகிழ்ச்சியுடன்  காசோலையாக அளித்தேன். 

விடுதலை வாசகர் சந்தா சேர்ப்பு பணியில் நமது தோழர்கள் குறிப்பாக பொதுச்செயலாளர் இரா. ஜெயகுமார் ஒன்றியத் தலைவர், ஜெகநாதன் இப்படியாக பல தோழர்கள், இரவு, பகல் என்று பாராது விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் சிறப்பாக  பணியாற்றுவதை காண்கிறேன். 'விடுதலை' என்னைப் போன்ற காங்கிரஸ்காரர்களுக்கு பேச, எழுத பி.ஜே.பி., - ஆர்.எஸ்.எஸ். போன்ற தீய சக்திகளுக்கு பதிலடி தரும் பீரங்கியாக செயல்படுகிறது. 

எனவே அய்யா அவர்கள் உடல் நிலை பாராது பங்கேற்ற உரத்த நாடு  கடை வீதி சந்தா சேர்ப்பு பணி தமிழ்நாட்டிலேயே முதன்மையான இடத்தை அடைய வேண்டும் என்று உறுதி கூறி; அய்யா பல நூற்றாண்டு வாழ எனது சார்பாக என் குடும்பம் சார்பாக வாழ்த்துகிறேன்.

- சாமி. மனோகரன்

மாவட்ட பொதுச் செயலாளர், 

இந்திய தேசிய காங்கிரஸ், 

தஞ்சாவூர்

No comments:

Post a Comment