தஞ்சை கடைவீதிகளில் விடுதலை சந்தாவோடு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வணிக பெருமக்கள் உற்சாக வரவேற்பு (20-08-2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

தஞ்சை கடைவீதிகளில் விடுதலை சந்தாவோடு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வணிக பெருமக்கள் உற்சாக வரவேற்பு (20-08-2022)

தஞ்சாவூர் கடைவீதிகளில் விடுதலை சந்தா வசூல் செய்ய வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பூண்டி இளவல் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார்  பயனாடை அணிவித்து வரவேற்றார். பூக்கடை முருகானந்தம்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை  வரவேற்று ரோஜாப்பூ மாலை  அணிவித்தார்.

நிலா புரமோட்டர்ஸ், நிலா மெஸ் உரிமையாளர் துரை.சுதாகர் விடுதலை சந்தா ரூ.25,000/-த்தையும்,  தஞ்சாவூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.ஜி. இராஜேந்திரன்  விடுதலை சந்தா ரூ20,000/-த்தையும்,   தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம்  விடுதலை சந்தா ரூ10,000/த்தையும் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.  


தஞ்சாவூர் வழக்குரைஞர் மாணிக்கவேல்  விடுதலை சந்தா ரூ.20,000/-த்தையும்,  தஞ்சாவூர் நகராட்சி மாமன்ற உறுப்பினர் சரீப்  விடுதலை சந்தா ரூ.20,000/-த்தையும்,   தஞ்சாவூர் மாநில மாணவர்கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன்  விடுதலை சந்தா ரூ.13,000/-த்தையும், தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சார்பில் ஒன்றிய செயலாளர் அரங்கராசன், தொழிலாளரணி தலைவர் சந்து  ஆகியோர் விடுதலை சந்தா ரூ.12,000/த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

தஞ்சாவூர் வளநாடு சில்க்ஸ் உரிமையாளர்   விடுதலை சந்தா ரூ10,000/-த்தையும்  தஞ்சாவூர் மகாராஜா ஜவுளி ஸ்டோர் உரிமையாளர் ஆசிப்அலி  விடுதலை சந்தா ரூ.10,000/-த்தையும்  தஞ்சாவூர் மாநகர அமைப்பாளர்  தமிழ் டிராவல்ஸ்  உரிமையாளர்  வன்னிப்பட்டு  தமிழ்ச்செல்வன், விடுதலை சந்தா ரூ.10,000/-த்தையும்  தமிழர் தலைவர்ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

தஞ்சாவூர் மாநகர தலைவர் பா.நரேந்திரன்  விடுதலை சந்தா ரூ.6,000/-த்தையும்,  தஞ்சாவூர் கழக பொதுக்குழு உறுப்பினர் வ. ஸ்டாலின்   விடுதலை சந்தா ரூ 5,000/-த்தையும், தஞ்சாவூர் அம்மாப்பேட்டை ஒன்றியத தலைவர் ஜவகர், துணைத் தலைவர் இராசேந்திரன்  ஆகியோர் விடுதலை சந்தா ரூ.4,000/-த்தையும்,  தஞ்சாவூர் மாவட்ட ப.க தலைவர் ச.அழகிரி, அருண் ஆகியோர் விடுதலை சந்தா ரூ.2,000/-த்தையும்,  தஞ்சாவூர் ஆட்டோ ஓட்டுநர் மாதவராஜ் விடுதலை சந்தா ரூ.2,000/-த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்
அன்பு சுவீட்ஸ் உரிமையாளர்  விடுதலை சந்தா ரூ.2,000/-த்தையும்,   தஞ்சாவூர் மருத்துவர் ப. இளம்பரிதி  விடுதலை சந்தா  ரூ2,000/-த்தையும்,  தஞ்சாவூர் ஸ்பீடு  டைலர் உரிமையாளர்   விடுதலை சந்தா ரூ2,000/-த்தையும்,  தஞ்சாவூர் பூதலூர் சந்தானம் விடுதலை சந்தா ரூ2,000/-த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

தஞ்சாவூர் குறிஞ்சி ரெடிமேட்ஸ்  உரிமையாளர்  விடுதலை சந்தாரூ.1,000/-த்தையும், தஞ்சாவூர் வழக்குரைஞர் சூரி என்கிற சண்முக சுந்தரம் விடுதலை சந்தா ரூ.2000/-த்தையும்,  தஞ்சாவூர் சரஸ்வதி ஸ்டோர் உரிமையாளர்  விடுதலை சந்தா ரூ1,000/-த்தையும் தஞ்சாவூர் அ.பெரியார் செல்வம்  விடுதலை சந்தாவையும்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

No comments:

Post a Comment