‘டோலோ 650’ மாத்திரைகளை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி வரை லஞ்சம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

‘டோலோ 650’ மாத்திரைகளை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி வரை லஞ்சம்?

புதுடில்லி, ஆக.22- ‘டோலோ 650’ மாத்திரைகளை மக்களுக்கு பரிந் துரைப்பதற்காக, சம்பந்தப்பட்ட ‘மைக்ரே லேப்ஸ்’ மாத்திரை தயா ரிப்பு நிறுவனம், நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களுக்கு 1000 கோடி ரூபாய் அளவிற்கான இலவசங்களை வாரியிறைத்து உள்ளதாக அதிர்ச் சிகரமான குற்றச்சாட்டு வெளியாகி யுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 10 நாட்க ளுக்குள் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நீதிபதி கள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பெங்களூருவைத் தலைமையக மாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘மைக்ரோ லேப்ஸ்’  நிறுவனம், காய்ச்சலைக் குணமாக்கும் புகழ் பெற்ற டோலோ-650 மாத்திரையை தயாரித்து வருகிறது. கரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கிய கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மைக்ரோ லேப்ஸ் நிறுவ னத்தின் ‘டோலோ 650’ மாத்திரைகள்தான், காய்ச்சலுக் காக மருத்துவர்களால் பரிந் துரைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், 2020-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.400 கோடி மதிப்புள்ள 350 கோடி டோலோ-650 மாத்திரைகளை ‘மைக்ரோ லேப்ஸ்’ நிறுவனம் தயாரித்து விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே கடந்த ஜூலை மாதம்  ‘டோலோ-650’ மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ்’  மற்றும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான  40 இடங்களில் வரு மான வரித் துறையினர் சோதனை நடத்தினர். நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திலீப் சுரானா, இயக்குநர் ஆனந்த் சுரானா ஆகியோ ரின் வீடுகளிலும் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பல் வேறு ஆவணங்களும், நிதிமுறை கேடுகளும் கண்டு பிடிக்கப்பட்ட தாகக் கூறப்பட்டது.

மருந்து மற்றும்  விற்பனைப் 

பிரதிநிதிகள் கூட்டமைப்பு

முன்னதாக மருந்துப் பொருள் களை விநியோ கிப்பதற்கு அதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் முறை கேடான வழிகளைப் பயன்படுத்து வதாக இந்திய மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளின் கூட்டமைப்பு  (Federation of Medical and Sales Representatives Association of India - FMRAI) கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு வழக்கு தொடர்ந்திருந்தது. “தங்கள் மருந்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய மருத்து வர்களுக்கு மருத்துவ நிறுவனங்கள் இலவசங்களை வழங்குகின்றன, இது தவிர பலவித மான கையூட்டுப் பழக்க வழக்கங்கள் இந்தத் துறையில் புரையோடிப் போயுள்ளன. ஆரோக்கியம் என்பது உயிர் வாழ்வுக்கான உரிமை யின் கீழ் இது வருகிறது. இதற்கு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நீதிசார்ந்த, அறம் சார்ந்த விற்பனை நடைமுறைகளைக் கடைப் பிடிப் பது அவசியம். ஆனால், இந்தத் துறையில் ஊழல் தலைவிரித்தாடு கிறது. குறிப்பாக மருத்து வர்களின் பிராக்டீஸ் மற்றும் மருத்துவர்கள் மருந்து பரிந்துரைக்கும் விதம் ஆகியவை ஊழல் மலிந்தவையாக உள்ளன.  மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு தங்கள் மருந்துகளை பிரிஸ்கைரப் செய்ய பரிசுப்பொருட்கள் தவிர இத்யாதி களை வழங்கி சலுகை கொடுக் கின்றன. இதனால், மருத்துவர்கள் 2 மாத்திரை போதும் என்ற இடத் தில் 10 மாத்திரைகளை பரிந்துரைக் கின்றனர். இதனால், நோயாளியின் உடல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதற்காக மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்க முடியும். 

நெறி முறைகளை மீறுபவர்களை...

ஆனால், அவர்கள் அனைத்தை யும் சமாளித்து இப்படியாக மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுத்து வருகின்றனர். ஆகவே, ஒன்றிய அரசு இதற்கான சட்டமியற்றி வழிகாட்டி நெறி முறைகளை வகுத்து மீறும் மருத் துவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் சஞ்சய் பரிக், ‘‘500 மில்லி கிராம் வரை அளவு கொண்ட மாத்திரைகளின் விலையை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தி வருகிறது. ஆனால், அதற்கு அதிகமான அளவு கொண்ட மாத்திரைகளின் விலையை அதைத் தயாரிக்கும் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.

முறைகேடுகளில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்

அதனைப் பயன்படுத்தி கூடுதல் லாபம் ஈட்டும் நோக்கில், 650 மில்லி கிராம் அளவு கொண்ட டோலோ மாத்திரையை அதிகமாகப் பரிந்து ரைப்பதற்காக அதைத் தயாரித்த நிறுவனம், மருத்துவர்களுக்கு சுமார் ரூ.1,000 கோடி மதிப்பி லான இலவசப் பொருள்களை லஞ்சமாக வழங்கியுள்ளது. இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு அளிக்கும் விளக் கத்தைப் பொறுத்து அத்தகைய முறைகேடுகளை நீதிமன்றத்திடம் தெரிவிக்க தயாராக உள்ளோம்’’ என்று புதிய அதிர்ச்சிகரமான தக வலைத் தெரிவித்தார். அப்போது, ‘‘நீங்கள் குறிப்பிடும் அதே மருந்தை தான் (டோலா 650) கரோனாவால் பாதிக்கப்பட்டபோது எடுத்துக் கொண்டேன். இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. இதை நீதி மன்றம் விரிவாக ஆராயும்’’ என்று நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.  மேலும், இந்த விவகாரத்தில் 10 நாட்களுக்குள் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தர விட்ட நீதிபதிகள், அடுத்த ஒரு வாரத்துக்குள் கூடுதல் விவரங் களைத் தாக்கல் செய்யவும் மனு தாரர்களுக்கு உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத் துள்ளனர்.


No comments:

Post a Comment