கந்தர்வக்கோட்டை அறிவியல் இயக்கத்தின் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை - ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

கந்தர்வக்கோட்டை அறிவியல் இயக்கத்தின் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை - ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

கந்தர்வகோட்டை, ஆக. 22- கந்தர்வக் கோட்டை ஒன்றிய அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினத்தை முன்னிட்டு மூடநம் பிக்கை ஒழிப்பு சட்டத்தை ஒன் றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக் கம் வட்டார தலைவர் அ.ரக மதுல்லா தலைமையில் நடத்தப் பட்டது.  வட்டாரச் செயலாளர் எம்.சின்னராசா அனைவரையும் வரவேற்றார்.

கையெழுத்து இயக்கத்தை அறிவியல் இயக்க புதுக் கோட்டை மாவட்டச் செயலா ளர் மு.முத்துக்குமார் தொடங்கி வைத்து தேசிய அறிவியல் மனப் பான்மை தினத்தையொட்டி அறிவியல் இயக்கம் மாநிலம் முழுதும் செய்யும் பணிகள் குறித்து பேசினார்.

அப்போது ஆகஸ்ட் 20 முதல் 27 வரை ஒருவார காலத் திற்கு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநிலம் முழுதும்  துண்டு பிரசுரம் மூலம் பிரச்சாரம், அறிவியல் அற்புதங்களை விளக்கும் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு, அறிவியல் விழிப்புணர்வு பேரணி, குறும்படம் திரையிடுதல், வினாடி வினா போட்டி, உள்ளிட்ட நிகழ்வுகள் நடை பெறுகிறது. இதில் பொதுமக்கள், சுயஉதவி குழுக்கள், மகளிர், இளைஞர்கள், ஆசிரியர்கள், துளிர் இல்லம், சிட்டுகள் மய்யம், பள்ளி, கல்லூரிகளில் என அனைத்து தரப்பு மக்களிடமும் தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழியை ஏற்க செய் யவும், மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை விரைவில் ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்றவும் வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.

தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்:

ஆகஸ்ட் 20 என்பது இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்படு கிறது. நமது அரசமைப்புச் சட் டம் இந்திய குடிமக்கள் அனை வரும் எந்த மதத்தில் இருக்கவும்,  சம உரிமையுடன் நடத்தப்படவும் வேண்டும் என்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் விதி 51(கி)பி யில் “மக்கள்  அறிவியல் மனப்பான்மையுடன் மற் றும் மனிதநேயத்துடன் வாழ வும், எதனை வேண்டுமானாலும் கேள்விக்குட்படுத்தலாம். இதன டிப்படையில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் பேருந்து நிலையத் தில் கூடியிருந்த பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்களிடம்  கையெழுத்து பெறப்பட்டது.

மேலும் ஒன்றியம் முழுக்க 2000 பேரை சந்தித்து மூடநம் பிக்கை ஒழிப்பு சட்டம் நிறை வேற்ற வலியுறுத்தி கையொப்பம் பெற்று அறிவியல் இயக்க மாநில மய்யத்தின் வழியாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கி சட்டம் இயற்ற வழியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அறிவியல் இயக்க தொடர் பணிகள் குறித்து மாவட்ட இணைச் செயலாளர் முனைவர் ரெ.பிச்சைமுத்து, எழுத்தாளர் அண்டனூர் சுரா ஆகியோர் பேசினர். நிகழ்வுகளை அறிவி யல் இயக்க மேனாள் வட்டாரத் தலைவர் பா.ரமேஷ் குமார் ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment