ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை யையும், மோடி தலைமையிலான பாஜக தனது பலத்தை அதிகரித்து வருவதையும் காட்டுகிறது என்கிறது தலையங்க செய்தி.

ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பட்ப அமைச் சசகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலராகவும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிச் கவுன்சிலின் (சிஎஸ்அய்ஆர்) தலைமை இயக்குநராகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் வழிக் கல்வியில் படித்த என்.கலைச்செல்வி நியமிக்கப் பட்டுள்ளார்.

தி டெலிகிராப்:

பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு குழறுபடி காரணமாக ரத்து செய்யப்பட்டது. எட்டு நாட்களுக்கு பிறகு தேர்வு நடைபெறும் என யுஜிசி சார்பில் இந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

உ.பி. அயோத்தி நில மோசடி பட்டியலில் அம்மாநகர மேயர், பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு.

நீதித்துறையில் பாரபட்சம் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் தீர்வு கிடைக்கும் என்பது தவறான கருத்து என்கிறார் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல்.

‘ஒன்றிய அமைச்சரவையில் ஜேடியு கட்சி மீண்டும் சேராது’என பீகாரில் ஆளும் அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜேடியுவை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை மாற்ற பாஜக சிங்கைப் பயன்படுத்தக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் உள்ளன.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள், தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட ஒன்றிய அரசின் கொள்கைகளை மாநில அரசுகள் மீது திணிக்கக் கூடாது என்றும், கூட் டாட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் வாதம்.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment