விவசாய நிலங்களை கார்ப்பரேட் வசமாக்க திட்டம்! - பாஜக மீது சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு - - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

விவசாய நிலங்களை கார்ப்பரேட் வசமாக்க திட்டம்! - பாஜக மீது சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு -

அய்தராபாத், ஆக.21 தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத் திற்காக நேற்று (20.8.2022) தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அய்த ராபாத்திலிருந்து முனுகோடு பகுதிக்கு ஊர்வலமாக தனது ஆதரவாளர் களுடன் சென்றார்.அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பேசியதாவது:

கிருஷ்ணா நதி நீதி பங்கீடு குறித்து இதுவரை ஒன்றிய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. முனுகோடுவில் எப் போதுமே பாஜகவிற்கு டெபாசிட் கூட வந்தது இல்லை. இம்முறை பாஜகவிற்கு வாக்களித்தால், விவசாய மோட்டாருக்கு மீட்டர் வைத்து விடுவார்கள். ஜாக் கிரதை. பிரதமர் மோடியின் ஆட்சியில் வங்கிகள், ரயில்கள், சாலைகளைக்கூட ஒன்றிய அரசு விற்று வருகிறது. விரை வில் கட்டடங்கள், விவசாய நிலங்களை கூட விற்று விடும். விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கும் திட்டத்தையும் ஒன்றிய அரசு அமலாக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

உரம் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற அனைத்திற்கும் பிரதமர் மோடியே காரணம். 2024 இல் நடக்கும் தேர்தலுக்கு பின்னர் நரேந்திர மோடி பெட்டி, படுக்கையுடன் கிளம்ப தயாராக உள்ளார். 

இவ்வாறு தெலங்கானா முதல மைச்சர் சந்திர சேகர ராவ் பேசினார்.

No comments:

Post a Comment